Home /News /national /

முகநூலில் பதிவிட்டு விட்டு லாரி மீது காரை மோத செய்து மகனுடன் தந்தை தற்கொலை..

முகநூலில் பதிவிட்டு விட்டு லாரி மீது காரை மோத செய்து மகனுடன் தந்தை தற்கொலை..

முகநூலில் பதிவிட்டு விட்டு லாரி மீது காரை மோத செய்து தந்தை, மகன் தற்கொலை..

முகநூலில் பதிவிட்டு விட்டு லாரி மீது காரை மோத செய்து தந்தை, மகன் தற்கொலை..

தேவராஜனுக்கு இன்னோரு மகளும் உள்ள நிலையில், விபத்து நடந்த அன்று மகனை மட்டும் காரில் அழைத்து சென்றுள்ளார்.

தனது மனைவியும் அவரது நண்பர்களும் தான் தங்களது தற்கொலைக்கு காரணம் என முகநூலில் பதிவிட்டு விட்டு காரை லாரி மீது மோத செய்து தந்தை மகன் பலியான சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காடு கரிப்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் தேவராஜன் ( 50 ) அவரது மகன் சிவதேவ் ( 12 ) . பிரகாஷ் தேவராஜின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தனது மகன் சிவதேவ் உடன் காரில் புறப்பட்டு சென்றார். ஆற்றிங்கல் அருகே வைத்து எதிரே வந்த டேங்கர் லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியது. இதில் பிரகாஷ் தேவராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். சிறுவன் சிவதேவை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுவனும் மரணம் அடைந்தார்.

இது குறித்து ஆற்றிங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதலில் இந்த சம்பவம் ஒரு விபத்தாக இருக்கலாம் என கருதப்பட்டது.  ஆனால் காரில் பிரகாஷ் தேவராஜன் எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது.

அதில் நானும், மகனும் தற்கொலை செய்து கொள்ள போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே பிரகாஷ் தேவராஜன் தனது முகநூல் பக்கத்திலும் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக பதிவிட்டிருந்து தெரிய வந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதில் தற்கொலைக்கு தனது மனைவியும் அவரது சில நண்பர்களும் தான் காரணம் என்றும் பதிவிடப்பட்டிருந்தது. மேலும் அவர்களை சட்டத்தின் கொண்டு வந்து தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டு இருந்தார். தனது மனைவி மற்றும் அவரது நண்பர் ஒருவரின் புகைப்படத்தையும் முகநூலில் பிரகாஷ் தேவராஜன் பதிவிட்டு இருந்தார்.

இதனால் பிரகாஷ் தேவராஜன் தனது மகனுடன் தற்கொலை செய்வதற்காகவே காரை லாரியுடன் மோதி இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இவர் குடும்ப பிரச்சனைகள் மற்றும் பொருளாதார ரீதியாகவும் சமீப காலமாக மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

தேவராஜனுக்கு இன்னோரு மகளும் உள்ள நிலையில், விபத்து நடந்த அன்று மகனை மட்டும் காரில் அழைத்து சென்றுள்ளார். இந்த சம்பவம்  குறித்து அவரது மனைவி மற்றும் மனைவியின் நண்பர்களிடம்  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

------------------------------------------------------------------------------------------

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Esakki Raja
First published:

Tags: Kerala

அடுத்த செய்தி