ஆந்திர மாநில நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து இறந்த மகள் சடலத்தைமோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் திருப்பதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மரணமடைந்த மகன் உடலை நெல்லூர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிள் தந்தை கொண்டு சென்ற அவலம் நடைபெற்றது. அதேபோல் நேற்று தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்த மகன் உடலை நெல்லூர் மாவட்டத்தை சேர்ந்த தந்தை ஒருவர் சொந்த ஊருக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்தது.
இந்த நிலையில் இன்று திருப்பதி மாவட்டம் நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து தண்ணீரில் மூழ்கி மரணம் அடைந்த மகள் உடலை தந்தை மோட்டார் சைக்கிளில் சொந்த ஊருக்கு கொண்டு சென்ற அவலம்அரங்கேறியுள்ளது. நாயுடு பேட்டை அருகே உள்ள கொத்த பள்ளியில் குட்டையில் தேங்கியிருந்த தண்ணீரில் விழுந்து இரண்டு வயது சிறுமி அட்சயா மரணம் அடைந்தார்.
சிறுமி உயிருடன் இருக்கலாம் என்று கருதி அங்கிருந்தவர்கள் நாயுடு பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். அட்சயாவின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல அவரது தந்தை 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளார். எனினும் அவர்கள் மறுத்துவிட்டனர். தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை தொடர்புகொண்டபோது அதிக வாடகை கேட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே நாளில் ‘ஓஹோ’ என மாறிய வாழ்க்கை... ஏழை விவசாயிக்கு சுரங்கத்தில் அடித்த ஜாக்பாட்!
ஆட்டோ ஓட்டுநர்களும் ஆட்டோவில் உடலை எடுத்து செல்ல சம்மதிக்கவில்லை. எனவே அட்சயாவின் தந்தை தன்னுடைய மகள் உடலை நாயுடு பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து கொத்தப்பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் எடுத்து சென்றார். கடந்த ஒரே வாரத்தில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் மூன்று முறை நடைபெற்றுள்ளன.
மேலும் படிக்க: காதலனின் விவசாய நிலத்தில் கல்லூரி மாணவி மர்ம மரணம் -கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை என பெற்றோர் புகார்
ஆனால் அரசும் அதிகாரிகளும் இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர். மூன்று சம்பவங்களிலும் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர் தனியார் ஆம்புலன்ஸ்களுக்கு அவர்கள் கேட்ட தொகையை கொடுக்க இயலாத நிலையில் இருந்தது காரணமாக அமைந்துள்ளது. எனவே ஏழைகளின் நலன் கருதி இதற்கு சரியான தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை ஆந்திராவில் எழுந்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Andhra Pradesh, Dead body, Girl Child