குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள வதோதரா மாவட்டத்தில் உள்ள சாவ்லி பகுதியில் எம்எல்ஏவாக இருப்பவர் பாஜகவைச் சேர்ந்த கேடன் இனாம்தார். இவரது சகோதரர் சந்தீப் இனாம்தார்.
சந்தீப் வசிக்கும் பகுதியில் அணில் மிஸ்திரி என்ற 56 வயது நபர் தச்சு தொழில் செய்து வருகிறார். அவருக்கு இரு மகன்கள் சிந்தன் மற்றும் பரத். வாகனங்களை வாடகைக்கு விட்டு தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஹோலி பண்டிகையான மார்ச் 8ஆம் தேதி அன்று அனில் மிஸ்திரியின் மூத்த மகன் சிந்தன் வழக்கம் போல தனது கடைக்கு வந்துள்ளார்.
அப்போது அங்கு எம்எல்ஏவின் சகோதரர் சந்தீப் மற்றும் அவருடன் இருந்த சிலர் மிக சத்தமான ஒலியில் மியூசிக் போட்டு நடனமாடிக் கொண்டிருந்தனர். கடையில் இருந்த சிந்தன் தனது வேலைக்கு தொந்தரவாக இருந்தததால் சந்தீப் இடம் சென்று சந்தத்தை குறைத்துக் கொண்டு கொண்டாடுங்கள் எனக் கூறியுள்ளார். இது சந்தீப்பிற்கு ஆத்திரமூட்டவே, அவரும் அங்கிருந்த 5 பேரும் சிந்தனை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.
பயந்து போய் அங்கிருந்து தப்பியோடி தனது தந்தை அனில் இடம் நடந்ததை கூறி முறையிட்டுள்ளார். உடனடியாக அனில் தனது வண்டியை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். அங்கிருந்த சந்தீப்பும் அவரது கும்பலும் நியாயம் கேட்க வந்த அனிலையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் அனிலின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கை, கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
அக்கம் பக்கத்து கடைக்காரர்கள் தாக்குதலை விலக்கி அனிலை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அனிலுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். சந்தீப் மற்றும் பிறர் மீது FIR பதிவு செய்துள்ள காவல்துறை அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Attacked, Crime News, Gujarat