பெண் குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சி... தந்தை மற்றும் தாத்தா கைது...!

கையில் துணிப்பை ஒன்றில் பச்சிளம் குழந்தை ஒன்றை வைத்திருந்த அவர்கள் குழிதோண்டி புதைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

பெண் குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சி... தந்தை மற்றும் தாத்தா கைது...!
பெண்குழந்தையை உயிருடன் புதைக்க முயற்சி
  • News18
  • Last Updated: November 1, 2019, 4:16 PM IST
  • Share this:
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே பெண் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்றதாக தந்தை மற்றும் தாத்தாவை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செகந்திராபாத்தில் உள்ள ஜூப்ளி பேருந்து நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இருவரை பொதுமக்கள் விசாரித்தனர்.

கையில் துணிப்பை ஒன்றில் பச்சிளம் குழந்தை ஒன்றை வைத்திருந்த அவர்கள் குழிதோண்டி புதைக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பான தகவலின் பேரில் அங்கு சென்ற போலீஸார் இருவரிடமும் விசாரித்தனர். தாங்கள் குழந்தையின் தந்தை மற்றும் தாத்தா என்றும், குழந்தை இறந்துவிட்டதால் புதைக்க முயற்சிப்பதாகவும் கூறினர்.

ஆனால், குழந்தை உயிருடன் இருப்பதை கண்ட போலீஸார் இருவரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

Also see...

Loading...

First published: November 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...