இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்... அட்டை இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம்

இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்... அட்டை இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்கு கட்டணம்

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை

பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 • Share this:
  நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை அமலுக்கு வருகிறது.

  தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருப்பது, எரிபொருள் வீணாவது, சில்லறை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை களையும் விதமாக பாஸ்டேக் முறையை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் முதல் கட்டாயமாக்கியது.

  இதனை செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்ததால் மூன்று முறை அவகாசம் வழங்கிய மத்திய அரசு, பிப்ரவரி 16ம் தேதி முதல் பாஸ்டேக் முறை அமல்படுத்தபடும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது. இதன்படி, சுங்கச்சாவடிகளில் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் வாகனங்களில் பாஸ்டேக் மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்துதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், சுங்கச்சாவடிகளில் உள்ள அனைத்து லேன்-களும் திங்கட்கிழமை நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் லேன்களாக மாற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: