பாஸ்டாக் அட்டை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!

இதுவரை சுமார் 70 லட்சம் வாகனங்களுக்கு பாஸ்டாக் அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

பாஸ்டாக் அட்டை பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!
பாஸ்டாக்
  • News18
  • Last Updated: November 30, 2019, 9:54 AM IST
  • Share this:
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் செலுத்துவதற்கான பாஸ்டாக் அட்டையை பொருத்துவதற்கான அவகாசம் வரும் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாஸ்டாக் அட்டையை வாகனங்களில் பொருத்தாவிடில் நாளை முதல் இரு மடங்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாஸ்டாக் அட்டை பெறுவதற்கான அவகாசத்தை வரும் 15ம் தேதி வரை சாலைபோக்குவரத்து அமைச்சகம் நீட்டித்துள்ளது. அதுவரை ரொக்கமாகவும் சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்தலாம். இதுவரை சுமார் 70 லட்சம் வாகனங்களுக்கு பாஸ்டாக் அட்டை விநியோகம் செய்யப்பட்டுள்ளது.


பாஸ்டாக் அட்டை இல்லாத வாகனங்களுக்கு நாளை முதல் இரு மடங்கு சுங்கக் கட்டணம் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  
First published: November 30, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்