நாடு முழுவதும் சுங்கச் சாவடி நாளை முதல் கட்டாய ஃபாஸ்டேக் முறை அமல்

நாடு முழுவதும் சுங்கச் சாவடி நாளை முதல் கட்டாய ஃபாஸ்டேக் முறை அமல்

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச் சாவடிகளில் கட்டாய பாஸ்டேக் முறை அமலுக்குவருகிறது.

 • Share this:
  நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக பாஸ்டேக் எனும் மின்னணு முறையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த நடைமுறைக்கு தற்போது வரை 80 சதவீதம் வாகன ஓட்டிகள் மட்டுமே மாறியுள்ள நிலையில், பாஸ்டேக் மூலம் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து பிப்ரவரி 15 ஆம் தேதிக்குப் பிறகு(நாளை முதல்) விலக்கு அளிக்கப்படாது என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

  அதேநேரம், கொரோனா பொதுமுடக்க பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் சூழலில், பாஸ்டேக் நடைமுறையில் இருக்கும் தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்யாமல் அவசர அவசரமாக பாஸ்டேக் நடைமுறையை அமல்படுத்துவது ஏன் என்றும் கேள்வியெழுப்பியுள்ளனர். பாஸ்டேக் இல்லாதவர்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: