சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை மூலம் முதன்முறையாக ஒரே நாளில் 80 கோடி ரூபாய் வசூல்

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை மூலம் முதன்முறையாக ஒரே நாளில் 80 கோடி ரூபாய் வசூல்

சுங்கச்சாவடிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள பாஸ்டேக் முறை மூலம் முதன்முறையாக ஒரே நாளில் 80 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதால் ஏற்படும் கால விரயத்தைத் தடுக்கும் வகையில், கடந்த ஆண்டு பாஸ்டேக் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ரொக்கப் பரிவர்த்தனையைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களுக்கு சுங்கச்சாவடிகளில் தனி வழி அமைக்கப்படும் என்பதால் எளிதாக செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

  2016ம் ஆண்டு இந்த பாஸ்டேக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. சில சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களுக்கும், இதர வாகனங்களுக்கும் ஒரே வரிசை பின்பற்றப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக வாகன ஓட்டுநர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதேபோல், பாஸ்டேகின் மினிமம் பேலன்ஸ் அதிகமாக உள்ளதாகவும், சுங்கச்சாவடிகளின் அருகே உள்ள சர்வீஸ் சாலை வழியாகச் செல்லும்போதுகூட பணம் பிடிக்கப்படுகிறது முதலான சில புகார்களும் வந்தன.

  Also read: தென் ஆஃப்ரிக்காவில் பரவும் புதிய வகை கொரோனா: இங்கிலாந்தில் உருமாறியதைவிட வேகமாகப் பரவுகிறதா?

  இந்நிலையில், எதிர்வரும் ஜனவரி 1ம் தேதி முதல் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பாஸ்டேக் பயனாளர்களின் எண்ணிக்கை நடப்பாண்டில் மட்டும் 400 சதவிகிதம் அதிகரித்து, 2 கோடிக்கும் அதிகமானோர் இந்த வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தச் சூழலில், இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24ம் தேதி மட்டும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையால் 80 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: