காஷ்மீர் விவகாரம்! இந்தியா, பாகிஸ்தானுக்கு வேண்டுகோள்விடுக்கும் ஃபருக் அப்துல்லா

காஷ்மீரிலுள்ள ஹோட்டலில் கூட்டம் நடத்துவதற்கு கட்சிகள் முடிவெடுத்திருந்தன. ஆனால், ஹோட்டல்களில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

news18
Updated: August 4, 2019, 9:57 PM IST
காஷ்மீர் விவகாரம்! இந்தியா, பாகிஸ்தானுக்கு வேண்டுகோள்விடுக்கும் ஃபருக் அப்துல்லா
பருக் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி
news18
Updated: August 4, 2019, 9:57 PM IST
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பருக் அப்துல்லா தெரிவித்துள்ளார். 

அமர்நாத் யாத்திரை கடந்த ஜுன் மாதம் 30-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 15 வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பஹல்காம், பால்தால் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. யாத்ரீகர்கள் செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதால், ஆகஸ்ட் 4 வரை யாத்திரை ஒத்திவைக்கப்பட்டது.

அதனையடுத்து, காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது என்று கூறி அம்மாநிலத்திலுள்ள சுற்றுலாப் பயணிகள் உடனே மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டது. மேலும், மாநிலம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதனால், காஷ்மீரில் பெரும் பதற்றம் நீடித்துவருகிறது. இந்தநிலையில், காஷ்மீர் மாநில அனைத்துக் கட்சித் தலைவர்கள் இன்று மாலையில் ஃபருக் அப்துல்லா இல்லத்தில் நடைபெற்றது.


இந்தக் கூட்டத்தில் ஃபருக் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.

அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஃபருக் அப்துல்லா, ‘காஷ்மீரில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாக நாங்கள் ஆலோசனை செய்தோம். அமர்நாத் யாத்திரையை ரத்து செய்த நிகழ்வு இதுவரையில் நடைபெற்றது இல்லை. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை பாதுகாக்க அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்துள்ளோம். காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவேண்டாம் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். ஏதேனும், நடவடிக்கை எடுத்தால் அது பதற்றத்தை அதிகரிக்கும்’ என்று தெரிவித்தார்.

முன்னதாக, காஷ்மீரிலுள்ள ஹோட்டலில் கூட்டம் நடத்துவதற்கு கட்சிகள் முடிவெடுத்திருந்தன. ஆனால், ஹோட்டல்களில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

Loading...

இதுகுறித்து தெரிவித்த மெஹ்பூபா முப்தி, ‘எல்லைப் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் குறித்து கேள்விப்பட்டோம். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது. கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக கேள்விப்பட்டோம். இது மிகவும் தவறானது. இது இஸ்ரேல் செய்வது. நம்முடைய நாடு, காந்தியின் நாடு. இது நடைபெற்றிருந்தால் தவறானது.

அரசியல் கட்சிகளை மத்திய அரசு மோசமாக நடத்துகிறது. நாளைக்கு எதாவது நடைபெற்றால் மக்களில் கோபம் கொள்வார்கள். மத்திய அரசு, போர்ச்சூழல் போன்ற சூழலை உருவாக்குகின்றனர்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: August 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...