முகப்பு /செய்தி /இந்தியா / ”என் தந்தை மீண்டும் ஒரு சுதந்திர மனிதர்” ஃபரூக் அப்துல்லாவின் மகள் ட்வீட்

”என் தந்தை மீண்டும் ஒரு சுதந்திர மனிதர்” ஃபரூக் அப்துல்லாவின் மகள் ட்வீட்

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா

காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், ஜம்மு- காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் ஏழரை மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவு 370-ஐ ரத்து செய்ததில் தொடங்கி, பரூக் அப்துல்லாவை, பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் மத்திய அரசு வைத்திருந்தது. தற்போது அவரின் தடுப்புக்காவல் நீக்கப்படுவதாக ஜம்மு- காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

இதையடுத்து வெளியே வந்த ஃபரூக் அப்துல்லா, காஷ்மீரில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அனைத்துத் தலைவர்களும் விடுவிக்கப்பட்டால்தான் அனைவருக்கும் விடுதலை என்று குறிப்பிட்டார்.

இது குறித்து, "என் தந்தை மீண்டும் ஒரு சுதந்திர மனிதர்" என்று அவரது மகள் சஃபியா அப்துல்லா கான் ட்வீட் செய்துள்ளார்.

"என் தந்தை மீண்டும் ஒரு சுதந்திர மனிதர்" என்று ட்வீட் செய்துள்ளார்.

ஃபருக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் நீக்கப்படுவதாக ஜம்மு- காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

Also see...

First published:

Tags: Article 370, Jammu and Kashmir