ஹோம் /நியூஸ் /இந்தியா /

தலைவர் பொறுப்பில் இருந்து விலகும் பரூக் அப்துல்லா..!

தலைவர் பொறுப்பில் இருந்து விலகும் பரூக் அப்துல்லா..!

பரூக் அப்துல்லா

பரூக் அப்துல்லா

பருக் அப்துல்லா 1981முதல் 2002 வரை மற்றும் 2006 முதல் தற்போது வரை என கட்சியின் தலைவராக பதவி வகித்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து தான் விலகவுள்ளதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

  நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சருமான 85 வயதான பரூக் அப்துல்லா, இனி தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என்றும் தலைவர் பதவிக்கான தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்தார். புதிய தலைமுறையினர் பொறுப்புகளை ஏற்கும் நேரம் இது. கட்சியின் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம்.

  இது ஒரு ஜனநாயக நடைமுறை கட்சிக்கு இளம் தலைமை வரவேண்டும் என விரும்புவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த மாதம் நடக்கவுள்ள அக்கட்சிக்கான தலைவர் தேர்தலில் பரூக் அப்துல்லா போட்டியிட மாட்டார்.

  இதையும் படிங்க: தீவிரவாதத்தை அடியோடு வேரறுக்கும் வரை ஓயமாட்டோம் : பிரதமர் மோடி

  பருக் அப்துல்லா 1981முதல் 2002 வரை மற்றும் 2006 முதல் தற்போது வரை என கட்சியின் தலைவராக பதவி வகித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் அடுத்த தலைவராக பரூக் அப்துல்லாவின் மகன் ஓமர் அப்துல்லா தேர்வு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பரூக் அப்துல்லா, கட்சியின் புரவலராகப் பொறுப்பேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

  Published by:Arunkumar A
  First published:

  Tags: Jammu and Kashmir