காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஃபருக் அப்துல்லாவின் சகோதரி, மகள் உள்ளிட்டோரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை குடியரசுத் தலைவர் உத்தரவு மூலம் மத்திய அரசு நீக்கியது. அதனையடுத்து, காஷ்மீர் இயல்பு வாழ்க்கை இரண்டு மாதங்களுக்கு மேலாக முடங்கியுள்ளது. காஷ்மீரின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஃபருக் அப்துல்லாவின் சகோதரி சுரையா, மகள் சஃபியா தலைமையில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கையில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர், காஷ்மீர் மாநில சட்டசபையின் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து, காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைக் கைது செய்தனர்.
Also see:
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.