பஞ்சாப் முதல்வர் பேத்தி திருமண விழாவில் நடனமாடி மகிழ்ந்த ஃபரூக் அப்துல்லா

பஞ்சாப் முதல்வர் பேத்தி திருமண விழாவில் நடனமாடி மகிழ்ந்த ஃபரூக் அப்துல்லா

ஃபரூக் அப்துல்லா, அம்ரிந்தர் சிங்

பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங்கின் திருமண விழாவில் எம்.பி ஃப்ரூக் அப்துல்லா நடனமாடி மகிழந்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

 • Share this:
  பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக கேப்டன் அம்ரீந்தர் சிங் இருந்துவருகிறார். அம்ரிந்தர் சிங்கின் பேத்தி சஹ்ரிந்தர் கவுரின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. இந்தத் திருமண நிகழ்ச்சியில் தேசிய அளவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தநிகழ்ச்சியில் கலந்துகொண்ட எம்.பியும் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஃபருக் அப்துல்லா, அங்கு இசைக்கப்பட்ட பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தார்.


  ஃபரூக் அப்துல்லா நடனமாடுவதைப் பார்த்த அம்ரிந்தர் சிங் அருகில் சென்று கைத் தட்டி அவரை உத்வேகப் படுத்தினார். நாடாளுமன்றத்திலுள்ள மிக வயது மூத்த எம்.பிகளில் ஒருவர் ஃபரூக் அப்துல்லா. காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட காலத்தில் காஷ்மீரின் தேசிய மாநாட்டுக்குக் கட்சியின் தலைவருமான ஃப்ரூக் அப்துல்லா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: