குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மத்தியில் ஆளும் பாஜக வேட்பாளருக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை மேற்கொண்டன. பிரிவினை சக்திகளை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட, அதற்காக பொது வேட்பாளர் ஒருவரை நாம் நிறுத்த வேண்டும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 22 கட்சிகளுக்கு கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார்.
கடந்த 15ஆம் தேதி மம்தா பானர்ஜி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் 17 எதிர்க்கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சரத் பவாரை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான பொது வேட்பாளராக முன்னிறுத்த மம்தா விரும்பினார். ஆனால், இதற்கு சரத் பவார் மறுப்பு தெரிவித்துவிட்டார்.
இதை அடுத்து காந்தியின் பேரனான கோபால கிருஷ்ண காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா ஆகியோரை வேட்பாளராக நிறுத்த மம்தா பானர்ஜி விருப்பம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரப்போகும் குடியரசுத் தலைவர் தேர்தல் தான் வேட்பாளராக போட்டியிட விரும்பவில்லை என பரூக் அப்துல்லா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மம்தா பானர்ஜி எனது பெயரை முன்மொழிந்துள்ளதை நான் கவுரவமாகக் கருதுகிறேன். மம்தா மட்டுமல்லாது, பல எதிர்க்கட்சி தலைவர்களும் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு என்னை வேட்பாளராக நிறுத்த ஆதரவு தெரிவித்தனர். இந்த எதிர்பாராத வாய்ப்பு குறித்து எனது உறவினர்கள் மற்றும் மூத்தோர்களுடன் ஆலோசனை நடத்தினேன்.
இதையும் படிங்க: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மருத்துவமனையில் அனுமதி
நாட்டின் மிக உயர்ந்த பொறுப்புக்கு என்னை தேர்வு செய்ய இத்தனை பேர் ஆர்வம் காட்டி ஆதரவு தெரிவித்ததற்கு ஆழ் மனதில் இருந்து நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அதேவேளை, ஜம்மு காஷ்மீர் தற்போது மிக சவாலான அரசியல் சூழலை சந்திக்கிறது. எனவே இந்த சூழலில் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு என்னால் இயன்ற சேவையை தர விரும்புகிறேன். எனவே, குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளராக போட்டியிட நான் விரும்பவில்லை. எதிர்க்கட்சிகள் நிறுத்தும் பொது வேட்பாளரை ஆதரிக்க நான் தயாராக உள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி' எனத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mamata banerjee, President