முகப்பு /செய்தி /இந்தியா / விவாதங்களின்றி இரு அவைகளிலும் நிறைவேறிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா - எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு

விவாதங்களின்றி இரு அவைகளிலும் நிறைவேறிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா - எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிப்பு

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்பதை, மத்திய அரசு தவிர்ப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்பதை, மத்திய அரசு தவிர்ப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்பதை, மத்திய அரசு தவிர்ப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றி நடைமுறைக்கு கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் தங்கள் நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க உதவும் என்று அரசு தெரிவித்தது. ஆனால் இந்த சட்டங்கள் பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும் என்று கூறி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இவற்றை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அதனை நிராகரித்த அரசு, திருத்தம் வேண்டுமானால் செய்யலாம் என்று கூறியது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனை விசாரித்த நீதிமன்றம் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்நிலையில் கடந்த 19-ம்தேதி அறிவிப்பு வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்றார்.

இந்நிலையில் இதுதொடர்பான மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டார்கள். விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க வேண்டும் என்பதை, மத்திய அரசு தவிர்ப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்த சூழலில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்த மசோதாவை வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Farm laws, Parliament