HOME»NEWS»NATIONAL»farmers who are weak kill selves cannot blame govt for suicide says karnataka agri minister mut

மனதளவில் பலவீனமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வார்கள், அதற்கெல்லாம் அரசை குறை கூற முடியாது: கர்நாடகா பாஜக அமைச்சர் பேச்சு

மனதளவில் உறுதியற்ற பலவீனமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர், இதற்கெல்லாம் அரசைக் குறை கூற முடியாது. அந்த மரணங்களுக்கெல்லாம் அரசை விமர்சிக்கலாமா? என்று கூறினார் கர்நாடக வேளாண் அமைச்சர்.

மனதளவில் பலவீனமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வார்கள், அதற்கெல்லாம் அரசை குறை கூற முடியாது: கர்நாடகா பாஜக அமைச்சர் பேச்சு
கர்நாடகா வேளாண் அமைச்சர் பி.சி.பாட்டீல்.
  • Share this:

மன உறுதியில்லாத, பலவீனமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வார்கள், விவசாயிகள் தற்கொலைக்கெல்லாம் அரசை விமர்சித்துக் கொண்டிருக்க முடியாது என்று கர்நாடக வேளாண் அமைச்சர் பி.சி.பாட்டீல் பேசியது சர்ச்சையாகி வருகிறது.

மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.பாட்டீல், “விவசாயிகள் தற்கொலை முடிவுக்கு அரசு வகுக்கும் கொள்கைகள் காரணம் கிடையாது.

விவசாயிகள் மட்டுமா தற்கொலை செய்து கொள்கிறார்கள், தொழிலதிபர்களும்தான் தற்கொலை செய்து கொள்கின்றனர். அனைத்துத் தற்கொலைகளையும் விவசாயிகள் தற்கொலை என்று வர்ணிக்க முடியாது.



மனதளவில் உறுதியற்ற பலவீனமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர், இதற்கெல்லாம் அரசைக் குறை கூற முடியாது. அந்த மரணங்களுக்கெல்லாம் அரசை விமர்சிக்கலாமா?

சில வேளைகளில் அவர்கள் மனம் பலவீனமடைகிறது, தற்கொலை செய்து கொள்கிறார்கள்” என்றார்.

இதே பாட்டீல்தான் டிசம்பர் 3ம் தேதி குடகு மாவட்டத்தில் பேசும்போது, “தற்கொலை செய்யும் விவசாயிகள் கோழைகள், தன் குழந்தைகள், மனைவியைக் காப்பாற்ற முடியாத கோழைகள். தண்ணீரில் விழுந்தால் நாம் தான் நீச்சல் அடித்து வெல்ல வேண்டும்” என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
Published by:Muthukumar
First published: