Delhi Farmers Protest | வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் இன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி...

கோப்புப் படம்.

வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள், இன்று டெல்லி எல்லையில் டிராக்டர் பேரணி நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளனர்.

  • Share this:
    மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த 6 மாதங்களாக போராடி வருகின்றனர். இதுதொடர்பாக 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும், முடிவு எட்டப்படாத நிலையில், விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. கடந்த நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய விவசாயிகள் போராட்டம் இன்றுடன் 6 மாதங்களை நிறைவு செய்கிறது. விவசாயிகள் போராட்டம் 7-வது மாதத்தில் அடியெடுத்து வைக்கும் நிலையில், இன்று டெல்லி எல்லையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்துகின்றனர். இதற்கான ஏற்பாடுகள் சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மேலும் படிக்க.. சர்வதேச அளவில் கவனத்தை பெற்ற 'வலிமை அப்டேட்'

    இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்ததை அடுத்து, டெல்லி எல்லைகளில் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு வருகின்றனர். இதனிடையே, அனைத்து விவசாய சங்கங்களும் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அழைப்பு விடுத்துள்ளார்.
    Published by:Vaijayanthi S
    First published: