• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெறும் - விவசாயிகள் உறுதி

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடைபெறும் - விவசாயிகள் உறுதி

டெல்லி விவசாயிகள் போராட்டம்

டெல்லி விவசாயிகள் போராட்டம்

குடியரசு தினத்தின்போது டிராக்டர்கள் பேரணி நடைபெறும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உறுதியாக தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் 50 நாட்களுக்கு மேலாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக ஒன்பதாவது கட்டமாக, விவசாய சங்க பிரிதிநிதிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்தியது. அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஸ்கோயல் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டனர்.

    அப்போது மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என விவசாயிகள் மீண்டும் வலியுறுத்தினர். ஆனால் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.இதையடுத்து விளைபொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் வழங்குவது குறித்த பேச்சுவார்த்தையிலும் விவசாயிகளுக்கு சாதகமான முடிவுகள் எட்டப்படவில்லை. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர விவசாயிகள் யோசனை தெரிவித்தனர். ஆனால் இதற்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 19ஆம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையில் விவசாயிகள் போராட்டத்தை முடிவு கொண்டுவருவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணையில், ‘குடியரசு தினத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டால், அது நாட்டுக்கு தர்மசங்கடமாக அமையும்’ என்று மத்திய அரசு சார்பில் டெல்லி காவல்துறையினர் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தனர். போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர், ‘இந்தியக் கொடியுடன் விவசாயிகள் அவர்களது போராட்டத்தைத் தொடர்வார்கள். அந்தப் போராட்டத்தில் குடியரசுத் தினக் கொண்டாட்டத்துக்கு எந்தப் பிரச்னையும் வராது.

    விவசாயிகளின் போராட்டத்தை களைப்பதற்கு பேச்சுவார்த்தை என்ற பெயரில் மத்திய அரசு பல முறை முயற்சித்தது. அது பலனளிக்கவில்லை. ஆதலால், அராஜக வழியை அரசு தற்போது தேர்ந்தெடுத்துள்ளது. என்ஐஏ, அமலாக்கத் துறை விசாரணைகள் மூலம் விவசாயிகளை பணிய வைத்துவிடலாம் என அரசு எண்ணுகிறது. அவர்களின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. எத்தகைய தடைகள் வந்தாலும் டிராக்டர் பேரணி நடைபெறும்’ என்று தெரிவித்துள்ளார்.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: