குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும்: காவல்துறை அனுமதி கிடைத்துள்ளது - விவசாயிகள் உறுதி

குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும்: காவல்துறை அனுமதி கிடைத்துள்ளது - விவசாயிகள் உறுதி

விவசாயிகள் பேரணி

குடியரசு தினத்தன்று இரண்டு லட்சம் விவசாயிகள் பங்கேற்கும் டிராக்டர் பேரணி திட்டமிட்டபடி நடைபெறும் என்று போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கான டெல்லி மாநில எல்லையில் 60 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசுக்கும் போராடும் விவசாயிகளுக்கும் இடையில் 11 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், வரும் குடியரசு தினத்தன்று லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் டிராக்டர் பேரணி நடைபெறும் என்று போராடும் விவசாயிகள் தெரிவித்தினர். ஆனால், டெல்லி காவல்துறை சார்பில் விவசாயிகள் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை ஒன்றரை வருடங்களை செயல்படுத்தால் இருப்பதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது. இருப்பினும், விவசாயிகள் அதனை ஏற்கவில்லை. இந்தநிலையில், திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டிராக்டர் பேரணி குறித்து நியூஸ்18-க்கு தெரிவித்த விவசாயிகள், ‘டிராக்டர் பேரணி காஸிபூர், சிங்கு, டிகிரி எல்லைகளிலிருந்து புறப்படும். டெல்லியில் நுழைவதற்கு டெல்லியில் காவல்துறையிலிருந்து அனுமதி கிடைத்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தெரிவித்த டெல்லி காவல்துறை, ‘விவசாயிகளுடன் இறுதி கட்ட பேச்சுவார்த்தையில் இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: