• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • உ.பி வன்முறை: விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப் பதிவு

உ.பி வன்முறை: விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப் பதிவு


உ.பி வன்முறை: விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப் பதிவு

உ.பி வன்முறை: விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப் பதிவு

உத்தரப் பிரதேசத்தில், வேளாண் சட்டங்களை எதிர்த்து நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதி விவசாயிகள் 4 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்த சம்பவத்தில் மத்திய அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது, விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதில் கார் மோதி நான்கு விவசாயிகள் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதற்கிடையில் நடந்த சம்பவத்துக்கும் தனது மகனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.
    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இந்த வன்முறை சம்பவத்தின் போது எனது மகன் அங்கு இல்லை. எனது மகன் துணை முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியில் தான் இருந்தேன், அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. அங்கிருந்த சில சமூக விரோதிகளே போராட்டக்காரர்களே கத்தி, கம்பு கொண்டு தாக்கியுள்ளனர். என் மகன் மட்டும் அங்கிருந்திருந்தால் நிச்சயமாக உயிருடன் திரும்பியிருக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

    இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 8 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக லக்கிம்பூரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. லக்கிம்பூருக்குச் செல்லும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அதேபோல், எதிர்கட்சி தலைவர்கள் அங்கு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற பிரியங்கா காந்தி சிறை வைக்கப்பட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: