தொடரும் விவசாயிகள் போராட்டம்: அமித்ஷாவுடன் மத்திய வேளாண்துறை அமைச்சர் சந்திப்பு
ஹரியானா- டெல்லி எல்லையில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

விவசாயிகள் போராட்டம்
- News18 Tamil
- Last Updated: November 30, 2020, 2:27 PM IST
வேளாண்மை தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் மூன்று சட்டங்களைக் கொண்டுவந்தது. மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு அப்போதிருந்தே நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் நிலவிவந்தன. நாடு முழுவதும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தமிழகத்திலும் வேளாண் சட்டங்களுக்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு வேளாண் சட்டங்களை ஆதரித்துவருகிறது. முன்னதாக, பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தொடக்க முதலே முன்னெடுத்துவருகின்றன.
இந்தநிலையில், பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லட்சகணக்கான விவசாயிகள் கடந்த ஐந்து தினங்களாக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். சாலை வழியாக நடந்தே டெல்லியை நோக்கி பேரணியை முன்னெடுத்தனர். அவர்கள் தடுத்து நிறுத்த துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை, தண்ணீர் பீய்ச்சியடித்தும் விவசாயிகளை துணை ராணுவப் படையினர் தடுத்து நிறுத்திவருகின்றனர். ஹரியானாவிலிருந்து டெல்லிக்கு செல்லும் சாலைகள் முடக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி கடந்த வெள்ளிக்கிழமை விவசாயிகள் டெல்லிக்குள் அதிரடியாக நுழைந்தனர். போலீஸாரின் தடுப்புகளை மீறிச் சென்ற விவசாயிகளை போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். ஆனால், அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் இருந்ததால் அவர்களை கலைந்து போக செய்ய முடியவில்லை. டெல்லி எல்லைப் பகுதியில் முகாமிட்ட அவர்கள், தாங்கள் போராட்டம் நடத்துவதற்கு ஜந்தர் மந்தர் மற்றும் ராம்லீலா மைதானத்தை ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க மறுத்த போலீஸார், புறநகர் பகுதியில் உள்ள புராரி எனுமிடத்தில் போராட்டம் நடத்துமாறு தெரிவித்தனர். விவசாயிகள் போராட்டம் காரணமாக டெல்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, டிக்ரி ஆகிய பகுதிகள் மூடப்பட்டுள்ளன. அதனால், ஹரியானாவிலிருந்து டெல்லிக்கு செல்பவர்களும், டெல்லியிருந்து ஹரியானா செல்பவர்களுக்கு மாற்று பாதையைப் பயன்படுத்த வேண்டும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் ஆங்காங்கே, சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர். இந்தநிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அவரது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இந்தநிலையில், பஞ்சாப், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லட்சகணக்கான விவசாயிகள் கடந்த ஐந்து தினங்களாக மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். சாலை வழியாக நடந்தே டெல்லியை நோக்கி பேரணியை முன்னெடுத்தனர். அவர்கள் தடுத்து நிறுத்த துணை ராணுவப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கண்ணீர் புகை, தண்ணீர் பீய்ச்சியடித்தும் விவசாயிகளை துணை ராணுவப் படையினர் தடுத்து நிறுத்திவருகின்றனர். ஹரியானாவிலிருந்து டெல்லிக்கு செல்லும் சாலைகள் முடக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி கடந்த வெள்ளிக்கிழமை விவசாயிகள் டெல்லிக்குள் அதிரடியாக நுழைந்தனர். போலீஸாரின் தடுப்புகளை மீறிச் சென்ற விவசாயிகளை போலீஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர். ஆனால், அதிக எண்ணிக்கையில் விவசாயிகள் இருந்ததால் அவர்களை கலைந்து போக செய்ய முடியவில்லை.