டெல்லியின் சிங்கூ எல்லையில் விவசாயிகள் குவிவதைத் தடுக்க இரும்புக் கம்பிகளால் ஆன சுவர்

டெல்லியின் சிங்கூ எல்லையில் விவசாயிகள் குவிவதைத் தடுக்க இரும்புக் கம்பிகளால் ஆன சுவர்

டெல்லி விவசாயிகள் போராட்டம்

'குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை, திட்டமிட்ட சதிச் செயல், போராட்டத்தை முடக்கும் மத்திய அரசின் முயற்சி, வெற்றி பெறாது. தடுப்புச் சுவர் அமைத்தாலும், விவசாயிகள் குவிவதை தடுக்க முடியாது' , என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

 • Last Updated :
 • Share this:
  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள், இரண்டு மாதத்துக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடத்தியும் பயனில்லை. குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் சமூகவிரோதிகள் வன்முறையில் ஈடுபட்டதில் சுமார் 400 போலீஸார் காயமடைந்தனர்.

  செங்கோட்டையில் கொடியேற்றிய தீப் சித்து பிரதமர் மோடிக்கும் அமித் ஷாவுக்கும் நெருக்கமானவர் என்ற செய்திகள் பரவ எதிர்க்கட்சிகள் பாஜகவை கடுமையாக விமர்சித்தன. , சன்

  இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்தனர். இதனையடுத்து சிங்கூ எல்லையில், விவசாயிகள் அதிக அளவில் கூடுவதை தடுப்பதற்காக, இரும்பு கம்பிகளை பயன்படுத்தி, தற்காலிக சுவர்களை, போலீசார் அமைத்துள்ளனர்.

  மேலும், உடைக்க முடியாத வகையில், சிமென்ட் பயன்படுத்தியும், இந்த தற்காலிக சுவர் அமைக்கப்பட்டுள்ளது.விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், 'குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை, திட்டமிட்ட சதிச் செயல், போராட்டத்தை முடக்கும் மத்திய அரசின் முயற்சி, வெற்றி பெறாது. தடுப்புச் சுவர் அமைத்தாலும், விவசாயிகள் குவிவதை தடுக்க முடியாது' , என்றனர்.

  இதற்கிடையே நேற்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வேளாண் சட்டங்களின் குறைநிறைகளை பற்றி பேச முன்வர வேண்டும், சங்கப் பிரதிநிதிகளுடன் பேசுவதை விவசாய அமைச்சர் ஒருபோதும் மறுத்ததில்லை என்றார்.
  Published by:Muthukumar
  First published: