• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விவசாயிகள் போராட்டம் | நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.814 கோடி இழப்பு: விவசாயிகளைச் சாடும் நிதின் கட்கரி

விவசாயிகள் போராட்டம் | நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.814 கோடி இழப்பு: விவசாயிகளைச் சாடும் நிதின் கட்கரி

விவசாயிகள் போராட்டம்.

விவசாயிகள் போராட்டம்.

நாடாளுமன்ற வளாகத்திலேயே விளைபொருட்களை விற்போம் என்று பாரதிய கிசான் யூனியன் விவசாயச் சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

  • Share this:
    விவசாயிகள் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.814 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

    வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் விவசாயிகள் 110 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் லோக்சபாவில் பேசினார், அப்போது, பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தானின் சில சுங்கச்சாவடிகளில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பஞ்சாபில் ரூ.487 கோடி, ஹரியாணாவில் ரூ.326 கோடி, ரூ.1.40 கோடி ராஜஸ்தானில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ஆனால் பிற மாநிலங்களில் விவசாயிகள் போராட்டத்தினால் இழப்பு ஏற்படவில்லை. பஞ்சாப் அரசிடம் சுங்கச்சாவடிகள் இயல்பாக இயங்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளோம், என்றார் நிதின் கட்கரி.

    லாக்டவுனினால் நின்று போன உள்கட்டமைப்பு திட்டங்களை தற்போது தொடரும்போது விலைவாசி உயர்வினால் திட்டத்தின் ஒட்டுமொத்த தொகையும் பல ஆயிரம் கோடி அதிகரித்துள்ளதாக உள்கட்டமைப்புத் துறையைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசை விமர்சிக்கும் வேளையில் விவசாயிகள் போராட்டத்தினால் நெடுஞ்சாலைத்துறைக்கு ஏற்பட்ட நஷ்டங்களை ஊதிப்பெருக்குகிறார் நிதின் கட்கரி என்று அரசியல் விமர்சகர்கள் கட்கரியை விமர்சித்து வருகின்றனர்.

    நாடாளுமன்ற வளாகத்திலேயே விளைபொருட்களை விற்போம்- ராகேஷ் திகைத்

    கடந்த நவம்பரிலிருந்து மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர், பேச்சுவார்த்தைகள் எதுவும் தோதுபடவில்லை, இருதரப்பிலும் இழுபறி நிலைதான் நீடித்து வருகிறது.

    விவசாயிகள் கேட்பதெல்லாம் குறைந்தப்பட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உறுதிதான், அதை மத்திய அரசு ஏற்கவில்லை,எழுத்துப்பூர்வ உத்தரவாதம் தருகிறோம் என்கின்றனர், அதற்கு சட்ட வலு உள்ளதா என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    இந்நிலையில் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத், விவசாய விளைப்பொருட்களை தேவைப்பட்டால் நாடாளுமன்ற வளாகத்திலேயே விற்பனைக்குக் கொண்டு வருவோம் என்று கூறியுள்ளார். எனவே எப்போது வேண்டுமானாலும் டெல்லிக்குள் செல்ல விவசாயிகள் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் அவர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: