• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • கிரேட்டா தன்பெர்க் ட்வீட் விவகாரம்: காலிஸ்தான் ஆதரவு அமைப்புடன் தொடர்புடையதா? கனடா உதவியை நாடும் இந்தியா

கிரேட்டா தன்பெர்க் ட்வீட் விவகாரம்: காலிஸ்தான் ஆதரவு அமைப்புடன் தொடர்புடையதா? கனடா உதவியை நாடும் இந்தியா

கிரேட்டா தன்பெர்க்

கிரேட்டா தன்பெர்க்

ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் பயன்படுத்தி பிற்பாடு நீக்கப்பட்ட டூல்கிட் வான்கூவரில் உள்ள பொயடிக் ஜஸ்டிஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்புடன் தொடர்புடையதாகத் தெரியவந்துள்ளது.

  • Share this:
    சுவீடன் நாட்டின் சுற்றுக்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், அவரை விசாரிக்க கனடாவின் உதவியை இந்தியா நாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மத்திய அரசின் மூன்று வேளாண் சீர்திருத்த சட்டங்களை எதிர்த்து, விவாசயிகள் தலைநகர் டெல்லி எல்லைகளில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், போராடும் விவசாயிகள், டெல்லிக்குள் நுழைவதைத் தடுக்க, டெல்லி காவல்துறையினர் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். அத்துடன், அங்கே இணையதள சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

    போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில், சுவீடனின் சுற்றுக்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் விவசாயிகளுக்கு ஆதரவான ட்வீட்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.

    இதனால், அவர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சதி மற்றும் குழுவினருக்கு இடையே பகைமையை வளர்ப்பதற்கான முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வழக்கு தொடர்ந்தாலும் அமைதியான முறையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தொடரும் என கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து விவசாயச்சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை ஆதரித்தோ, தூண்டும் வகையிலோ, குறிப்பாக ஜனவரி 26ம் தேதி அன்று நடந்த வன்முறை தொடர்பாகவோ எதிர்பாளர்கள் பயன்படுத்தும் ‘டூல்கிட்’ உருவாக்குனர்களை விசாரணை வலையத்துக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை இந்தியா முன்னெடுத்திருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

    கனடா நாட்டுடன் பரஸ்பர சட்ட ஒப்பந்தம் உள்ளதால் இது சாத்தியம் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

    ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் பயன்படுத்தி பிற்பாடு நீக்கப்பட்ட டூல்கிட் வான்கூவரில் உள்ள பொயடிக் ஜஸ்டிஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்புடன் தொடர்புடையதாகத் தெரியவந்துள்ளது.

    விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கவே இந்த டூல்கிட் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த வான்கூவர் பொயடிக் ஜஸ்டிஸ் ஃபவுண்டேஷன் உலக சீக்கிய அறக்கட்டளையுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சீக்கிய அமைப்புதான் காலிஸ்தானுடன் தொடர்புடையது என்று கருதப்படுகிறது.

    பொயடிக் ஜஸ்டிஸ் ஃபவுண்டேஷன் நிறுவனர் தாலிவல், என்பவர் ஜனவரி 26ம் தேதி கனடா நெட்வொர்க் குளோபல் டிவிக்கு அளித்த பேட்டியில் ’ஆஸ்க் இந்தியா ஒய்’ என்ற பரப்புரையை தொடங்கியதாக தெரிவித்ததையும் ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது. இந்த டூல்கிட் மூலம் பிரபலங்கள் தங்கள் குரல்களை எழுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது .

    இந்நிலையில் கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்ட பிரபலங்கள் விவசாயப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மேற்கொள்ளும் ட்வீட் கனடாவின் வான்கூவரில் உள்ள பொயடிக் ஜஸ்டிஸ் ஃபவுண்டேஷனுடன் தொடர்புடையதால் கனடா நாட்டின் உதவியை இந்தியா நாடியுள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி கூறுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: