Farmers Protest : 6 மாதத்தை நெருங்கிய விவசாயிகள் போராட்டம்: நாளை கறுப்பு தின போராட்டம் அறிவிப்பு

டெல்லி விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சீர்திருத்த சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் (26ஆம் தேதி) நாளையுடன் 6 மாதத்தை நிறைவு செய்யவுள்ளது.

  • Share this:
    விவசாயிகள் போராட்டம் 6 மாதத்தை நெருங்கியுள்ள நிலையில், நாளை நாடு முழுவதும் கறுப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட விவசாய அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

    விவசாயிகளின் இந்த கறுப்பு தின போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உட்பட உள்ளிட்ட 12 அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கையெழுத்திடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று, போராட்டத்தில் பங்கேற்றுள்ள லட்சக்கணக்கான விவசாயிகளை கொரோனா பாதிப்பில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

    Read More : இந்தியாவில் தடுப்பூசி 2 டோஸ் போட்டுக் கொண்டாலும் முகக்கவசம் அணிவதை நிறுத்தக்கூடாது - மருத்துவர்கள் எச்சரிக்கை

     

    சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, உணவு பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க, சட்டப்பூர்வ உரிமை வழங்க வேண்டும். அதுதொடர்பாக, மீண்டும் விவசாயிகளுடன் பேச்சை துவங்க வேண்டும்.

    Must Read : தமிழகத்துக்கு நீட் தேர்வு தேவையில்லை என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தியதற்கு கல்வியாளர்கள் வரவேற்பு...

     

    கறுப்பு தின போராட்டத்திற்கு எங்கள் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம். புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.
    Published by:Suresh V
    First published: