ஹோம் /நியூஸ் /இந்தியா /

டெல்லியில் கடுங்குளிரில் 30-வது நாளை எட்டியுள்ள விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் கடுங்குளிரில் 30-வது நாளை எட்டியுள்ள விவசாயிகள் போராட்டம்

டெல்லி விவசாயிகள் போராட்டம்

டெல்லி விவசாயிகள் போராட்டம்

டெல்லி எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளையும், முக்கிய நெடுஞ்சாலைகளையும் விவசாயிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றனர்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

வேளாண் சட்டங்கள் தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் விவாதிக்க உள்ள அம்சங்கள் குறித்து விவசாய அமைப்புகள் இன்று முக்கிய முடிவை அறிவிக்கின்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 30-ஆவது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடக்கும் இடம், நேரம் மற்றும் பேச்சுவார்த்தையில் விவாதிக்க வேண்டிய உள்ளடக்க அம்சங்களை விவசாயிகளே தீர்மானிக்க மத்திய அரசு கோரியது. இந்நிலையில் குறைந்தபட்ச ஆதார விலை குறித்து விவாதிக்க முடியாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் விவசாய அமைப்புகள் இதனை எதிர்த்துள்ளன. எந்த வகையான கோரிக்கைகள் அரசுக்கு முன் வைக்கப்படும் என்பது குறித்து விவசாய அமைப்புகள் கலந்து ஆலோசித்து இன்று முடிவை அறிவிக்க இருக்கின்றன. விவாதிக்க வேண்டிய உள்ளடக்கத்தை மாற்றாமல் மத்திய அரசு முரண்டுபிடிப்பதுடன், விவசாயிகள்தான் பிரச்னை குறித்து விவாதிக்க தயங்குவதாக தோற்றம் ஏற்படுத்துகிறது என விவசாயிகள் சாடியுள்ளனர்.

இதனிடையே டெல்லி எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளையும், முக்கிய நெடுஞ்சாலைகளையும் விவசாயிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றனர். கடுங்குளிருக்கு மத்தியிலும் திக்ரி, ஷிங்கு எல்லைகளில் விவசாயிகள் முகாமிட்டுள்ளனர்.

இதனிடையே, பஞ்சாப் விவசாயிகள் தவறாக வழிநடத்தப்படுவதாக, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார். புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்து, பா.ஜ.க சார்பில் மறைமலைநகரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

Also read... ஈரோடு மாநகராட்சி நோட்டீஸை எதிர்த்த 34 வழக்குகள் தள்ளுபடி- சென்னை உயர் நீதிமன்றம்

இதில் கலந்துகொண்ட அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சில விவசாயிகள் தங்களது அரசியல் கட்சி முதலாளிகளின் தூண்டுதலின் பேரில் போராட்டம் நடத்தி வருவதாக சாடினார். குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என உறுதியளித்த அவர், பஞ்சாப் விவசாயிகளின் ஆண்டு வருமானம் 2 மடங்காக உயர்ந்து விட்ட நிலையிலும் அவர்கள் போராடி வருவது வேடிக்கையானது என்றார்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Delhi farmers, Farmers Protest Delhi