சாலைகள், பாலங்கள் நிரம்பின - உத்தரப் பிரதேசத்தில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான விவசாயிகள்

விவசாயிகள் போராட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடினர்.

  • Share this:
    உயிரே போனாலும் 3 வேளாண்சட்டங்களைத் திரும்ப பெறும் வரை, போராட்டக்களத்தை விட்டு வெளியேற மாட்டோம் என டெல்லியில் போராடும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

    டெல்லி எல்லையில் கடந்த 9 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. அண்மையில் ஹரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது. அம்மாநில போலீசார் கடுமையான தடியடி நடத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் விவசாயிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் விவசாயிகள் மகா பஞ்சாயத்து எனும் கூட்டத்தை நடத்தினர். பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து, பெண்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான விவாசாயிகள் அங்கு கூடினார்.

    ஆயிரக்கணக்கில் கூடிய விவசாயிகள்


    மேள, தாளங்கள் முழங்க விவசாயிகள் பேரணியாக சென்றதால், பல சாலைகளில் போக்குவரத்து முடங்கியது. இதனால், முசாபர்நகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அத்தனை பேருக்கும் உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், விவசாயிகள் சங்கம் தரப்பிலேயே ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    ஜிஐசி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில், போராட்டத்தை முன்னின்று நடத்தி வரும், ராகேஷ் திகாயத், யோகேந்திர யாதவ் உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்கள் பங்கேற்றனர்.

    மேடையில் பேசிய ராகேஷ் திகாயத், உயிரே போனாலும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை, டெல்லி போராட்டக்களத்தில் இருந்து வெளியேற மாட்டோம் என்றார். நாட்டின் சுதந்திரத்திற்கான போராட்டம் 90 ஆண்டுகள் நீண்டதுபோல் தங்களது போராட்டமும், வெற்றி பெறும் வரை தொடரும் என குறிப்பிட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தியாவே தற்போது விற்பனைக்கு உள்ளதாகவும், அம்பேத்கரின் அரசியலமைப்பு ஆபத்தில் உள்ளதாகவும் கவலை தெரிவித்தார். வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில், லக்னோவில் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தவும் விவசாய சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, அதிகாரத்தின் ஆணவம் விவசாயிகளின் குரலுக்கு முன்னால் எடுபடாது என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published: