இந்த திட்டத்தால் விவசாயிகள் ரூ. 36,000 பெறலாம் - வழிமுறைகள் இதோ...

விவசாயிகள் - கோப்புப் படம்

இத்திட்டத்தில் இணையும் விவசாயிக்கு 60 வயது ஆகும்போது அவரது வங்கிக் கணக்கில் குறைந்தது ரூ.3,000 வந்து சேரும். இத்திட்டத்துக்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது ஆகும்.

 • Share this:
  பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) எனப்படும் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக தலா 2,000 ரூபாய் என ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

  “சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்.... ” என்று கூறுகிறார் வள்ளுவர். மனிதர்களின் அத்தியாவசியத் தேவகளுள் முதலாவதான உள்ள, உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த கொரோனா காலத்தில் மேலும் கூடுதல் துன்பங்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், விவசாயிகளின் வறுமையைப் போக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அதன்படி, பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) எனப்படும் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு மூன்று தவணைகளாக தலா 2,000 ரூபாய் என ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசிடமிம் இருந்து நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.

  கொரோனா பரவலுக்குப் பிறகு மக்களிடையே நிதி நெருக்கடி ஏற்பட்டதால், ஊரடங்கு காலத்தில் விவசாயிகளுக்கு விரைவாகப் பணம் வழங்கப்படும் என அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. அதன்படி தொடர்ந்து பணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் மற்றொரு திட்டத்திலும் மாதாந்திர பென்சன் வாங்க முடியும்.

  பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்ற திட்டத்தில் விவசாயிகளுக்கு பென்சன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் இணையும் விவசாயிக்கு 60 வயது ஆகும்போது அவரது வங்கிக் கணக்கில் குறைந்தது ரூ.3,000 வந்து சேரும். இத்திட்டத்துக்கான வயது வரம்பு 18 முதல் 40 வயது ஆகும். 60 வயது வரையில் மாதத்துக்கு 55 ரூபாய் முதல் 200 ரூபாய்வரையில் பிரீமியம் செலுத்த வேண்டும்.

  Must Read : 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் என்ன படிக்கலாம் - மாணவர்களுக்கு ஓர் ஆலோசனை!

  இந்தத் திட்டத்தில் இணைவதற்கு மந்தன் maandhan.in என்ற முகவரியில் சென்று இணைந்து கொள்ளலாம். இதற்கு ஆதார், வங்கிக் கணக்குப் புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ போன்றவை தேவைப்படும். இந்தத் திட்டத்தில் இணையும் விவசாயிகளின் வயதைப் பொறுத்து பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கெனவே பி.எம். கிசான் திட்டத்தில் இணைந்து நிதியுதவி பெறுபவர்கள் மந்தன் திட்டத்தில் இணைவது எளிது.

  எனவே, இதில் இணைந்து ஆண்டுக்கு 36,000 ரூபாய் வரையில் பெற்று பயன்பெறலாம். இதுபோன்ற திட்டங்கள் நலிவுற்ற நிலையில் வாழும் ஏழை விவசாயிகளுக்கு பெரிதும் பயன் உடையதாக இருக்கும்.
  Published by:Suresh V
  First published: