விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பாஜக தலைவர் ஒருவரின் ஒன்றரை ஏக்கர் நிலத்தில் விதைக்கப்பட்டிருந்த நெல் நாற்றுகளை பிடுங்கி எறிந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளே விவசாயத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிபூர் பகுதிகளில் விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளே பெருமளவில் அங்கு தங்கியிருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலுக்கு மத்தியிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் விவசாயிகளின் போராட்டம், 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் சூடு பிடித்துள்ளது. இதனிடையே போராட்டத்தின் முக்கிய சங்கமான விளங்கும் Samyukta Kisan Morcha, Bharatiya Kisan Union ஆகிய சங்கங்களைச் சேர்ந்தவர்கள், போராட்டத்தின் ஒரு அங்கமாக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஒருவரின் வயலுக்குள் புகுந்து அங்கு விதைக்கப்பட்டிருந்த நெல் நாற்றுகளை பிடுங்கி எறிந்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பாஜக பிரமுகரான Harjeet Singh Grewal-ல் விவசாய நிலம் பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் உள்ள தனுவாலா எனும் கிராமத்தில் உள்ளது. ஒன்றரை ஏக்கர் பரப்பிலான இந்த நிலத்தில் முற்றிலும் நெல் நாற்றுகள் நடவு செய்யப்படிருந்தன. இந்நிலையில் நேற்று இரு சங்கங்களையும் சேர்ந்தவர்கள் கைகளில் கொடியுடன் அந்த விவசாய நிலத்திற்குள் புகுந்து தங்கள் கைகளால் நெல் நாற்றுகளை பிடுங்கி எறிந்ததுடன், டிராக்டர் மூலமும் நிலத்தை நாசப்படுத்தியுள்ளனர்.
#NewsAlert | Farmers uproot farms of a BJP leader in #Barnalla.
Details by Gurpreet. pic.twitter.com/88qLyEe3Eu
— TIMES NOW (@TimesNow) July 3, 2021
விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்களை பாஜக தலைவர் Harjeet Singh Grewal முன்னர் விமர்சித்திருந்ததாகவும், இதன் காரணமாக அவரின் நிலத்தை யாரும் குத்தகைக்கு வாங்கக்கூடாது என விவசாயிகள் எச்சரித்திருந்தனர் என்று கூறப்படுகிறது.. இந்த நிலையில் அவரின் நிலத்தில் நெல் நாற்று நடவு செய்திருந்ததையறிந்து அங்கு சென்று இந்த செயலில் அவர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Also Read: பூமியின் அழிவு எப்போது?: சரியாக கணித்த ஆராய்ச்சியாளர்கள்!
சம்யுக்தா கிசான் மோர்சா சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் Balwant Singh Uppali என்பவர் சம்பத்தின் போது உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விவசாயிகளே விவசயாத்துக்கு எதிராக திரும்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
பாஜக தலைவர் Harjeet Singh Grewal, தனது நிலத்தில் ஏற்பட்ட நிகழ்வு குறித்து பஞ்சாப் டிஜிபியிடம் நேரில் புகார் அளித்திருப்பதாக கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: BJP, Farm laws, Farmers, Farmers Protest, Punjab, Trending, Viral