வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தொடங்கியதன் ஓராண்டு நிறைவையொட்டி, இன்று நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலிருந்து டெல்லியை நோக்கி விவசாயிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லைப் பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.
இதற்கான மசோதா, வரும் 29ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது. எனினும், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு நிவாரணம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Also read:
புதிய Yamaha FZ-X பைக் எப்படி இருக்கு? ஒரு ரைட் ரிப்போர்ட்
இந்நிலையில், டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டம் தொடங்கி ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, இன்று நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்க பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலிருந்து விவசாயிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
டிராக்டர்கள், ஜீப்கள், கார்கள் மூலம் வரிசை வரிசையாக செல்லும் விவசாயிகள், சிங்கு, திக்ரி, காசிபூர் எல்லைகளில் குவிந்து வருகின்றனர். இதனையடுத்து டெல்லி எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.