முகப்பு /செய்தி /இந்தியா / கர்நாடகாவில் நகராட்சி அலுவலகத்திற்குள் காளை மாட்டுடன் நுழைந்த விவசாயி.. மிரண்டு போன ஊழல் அதிகாரிகள்

கர்நாடகாவில் நகராட்சி அலுவலகத்திற்குள் காளை மாட்டுடன் நுழைந்த விவசாயி.. மிரண்டு போன ஊழல் அதிகாரிகள்

காளை மாட்டுடன் நுழைந்த விவசாயி எல்லப்பா

காளை மாட்டுடன் நுழைந்த விவசாயி எல்லப்பா

லஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு பதிலடி தரும் விதமாக கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவர் தனது காளை மாட்டுடன் நகராட்சி அலுவலத்திற்குள் நுழைந்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Karnataka, India

கர்நாடகாவில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இன்னும் சில மாதங்களில் அங்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக தொடங்கியுள்ளன. அம்மாநிலத்தில் எழும் லஞ்ச, ஊழல் புகார்கள் ஆளும் பாஜகவுக்கு கடும் சவாலாக உள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் விதமாக முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்திலேயே ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. முதல்வரின் சவனரு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி எல்லப்பா ரனோஜி. இவர் தனது நிலத்திற்கான ஆவணங்களில் மாற்றம் மேற்கொள்ள நகராட்சி அலுவகத்தை நீண்டகாலமாக அனுகிவந்துள்ளார்.

ஆனால், நகராட்சி அதிகாரிகளோ வேலையை செய்து கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். வேலை ஆக வேண்டும் என்றால் ரூ.25,000 லஞ்சம் வழங்க வேண்டும் என்றுள்ளனர். விவசாயி எல்லப்பாவும் பணத்தை திரட்டி ரூ.25,000 தந்துள்ளார். அதன் பின்னரும் வேலையை முடித்து தராமல் கூடுதலாக ரூ.25,000 தர வேண்டும் என்றுள்ளனர்.

கோபமடைந்த விவசாயி எல்லப்பா, அதிகாரிகள் மிரளும் விதமாக ஒரு காரியத்தை செய்தார். தனது காளை மாட்டை ஓட்டி நகராட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த எல்லப்பா, தன்னிடம் பணம் எல்லாம் இல்லை, இந்த காளை மாட்டை வைத்துக்கொண்டு காரியத்தை முடித்து தாருங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியது. இதன் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட பலர் அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய 5 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு நிர்வாக தரப்பு உறுதி அளித்துள்ளது.

First published:

Tags: Bribe, Farmer, Karnataka, Viral Video