Home /News /national /

OPINION: விவசாயிகள் போராட்டம்: பெருவணிகங்கள் மோசமானவையா? அல்லது இலக்குக்கு ஆளாக்கப்படுகிறனவா?

OPINION: விவசாயிகள் போராட்டம்: பெருவணிகங்கள் மோசமானவையா? அல்லது இலக்குக்கு ஆளாக்கப்படுகிறனவா?

விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் போராட்டம்

புதுமையின் சுறுசுறுப்பு மற்றும் வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரம் தேசிய அளவில் போட்டித்தன்மையை உந்துகிறது, வேலைகளை உருவாக்குகிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  ஒரு பெரிய நெருக்கடியின்போது, சில செல்வந்தர்களின் செல்வம் அதிகரித்துள்ளது என்பது உண்மையானது எனினும், தனியார் நிறுவனங்களையும், புதுமையான மற்றும் சுயதொழில் முனைவோரையும் வளர்த்துள்ளன என்பதை மறுக்க முடியுமா?

  வேளாண் விளைபொருள்கள் தொடர்பான மூன்று புதிய மத்திய சட்டங்கள், விற்பனை, பதுக்கல், விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் ஒப்பந்த விவசாய சீர்திருத்தங்களுக்கு எதிராக 2020 செப்டம்பர் 25 அன்று, பாரத் பந்த் உடன் தொடர்புபடுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், அம்பானி மற்றும் அதானி ஆகிய இரு தொழில்முனைவோரை மட்டுமே குறிவைக்கின்றன.

  எதிர்க்கட்சி முகாமில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் சமூக ஊடகங்களில் பிரபலமானவர்கள் ஆகிய இருதரப்பும், புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை மட்டுமல்ல, ரிலையன்ஸ் மற்றும் அதானி ஆகிய இரண்டு தொழில்துறை குழுக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கின்றன என கட்டவிழ்த்து விடுகிறார்கள். அதே நேரத்தில், இந்த நிறுவனங்கள் இந்திய முதலாளித்துவவாதிகளுக்கு எதிராக வரும் குறைபாடுகள் அனைத்தையும் சுமந்து கொள்கின்றன. இந்த ஆர்ப்பாட்டங்களின் போது காழ்ப்புணர்ச்சியால் அவை நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளன.

  லூதியானாவில் உள்ள ரிலையன்ஸ் சூப்பர் ஸ்டோரை தாக்கியவர்கள், தோபா பிராந்தியத்தில் ரிலையன்ஸ் பெட்ரோல் பம்புகளை கைப்பற்றுவது மற்றும் மோகா மாவட்டத்தில் அதானியின் தானிய சேமிப்பு கிடங்குகளைக் கைப்பற்றியதை அங்கு எடுக்கப்பட்ட படங்கள் மூலம் நாம் பார்த்தோம். ஜியோ தொலைத் தொடர்புகளை புறக்கணிப்பது ஒரு புதிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமாக மாறியுள்ளது.

  இந்த மசோதாக்கள் எந்தவொரு விவசாயிகளிடமிருந்தும் பண்ணை விளைபொருட்களை எளிதாக வாங்க  தனியார் வேளாண் வணிக அலகுகளுக்கு அதிகாரம் அளிக்கின்றன என்கிற வாதம், லாபமீட்டும் பெரிய வணிகம், பாதிக்கப்படக்கூடிய சிறிய வணிகம் என்பதைப் போலான பிம்பத்தை உருவாக்குகின்றன. சிறு விவசாயிகளை வலிமை மிக்க வேளாண் வணிக நிறுவனங்கள் கட்டுப்படுத்துவதாக கதைகட்டப்படுகிறது.

  ஜியோ செப்டம்பர் 2016-இல் தொடங்கப்பட்டதில் இருந்து 400 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட ஒரு வணிகமாக உயர்ந்துள்ளது.  ஜியோ வியக்கத்தக்க தொலைநோக்கு பார்வை, தொழில்நுட்ப அபிலாஷைகள், அதிவேக உள்கட்டமைப்பு மேம்பாடு, இணையத்தில் ஒரு வணிக அடிப்படையிலான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றைச் சாதித்துள்ளது.

  வணிக சார்புடையதாக பரவலாகக் கருதப்படும் குஜராத் வளர்ச்சியை முன்னிறுத்தி நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தார், வெற்றிகரமான குஜராத்தி தொழிலதிபர்கள் மீது சிறப்பு கவனம் செலுத்துகிறார் எனச் சொல்லப்பட்டது. நிலம் கையகப்படுத்தல் 2015, திவால் குறியீடு 2016 மற்றும் தொழிலாளர் சட்டத் திருத்தங்கள் அரசியல் நிலைப்பாட்டை பெரு நிறுவனங்களுக்கு சாதகமானதாக தோன்றச் செய்தது. இது அரசியல் ரீதியாக விரும்பத்தக்கதாக இருக்காது என்றாலும், இது இந்தியாவுக்கு ஒரு முழுமையான தேவை. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அதிகாரத்துவ பிடியில்லாமல் ஒரு துடிப்பான தனியார் துறை தேவை. புதுமையின் சுறுசுறுப்பு மற்றும் வலிமை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உராய்வு இல்லாத பொருளாதாரம் தேசிய அளவில் போட்டித்தன்மையை உந்துகிறது, வேலைகளை உருவாக்குகிறது மற்றும் அதிக வருமானத்தை வழங்குகிறது.

  தாராளமயமாக்கப்பட்ட இந்தியாவின் கடந்த 30 ஆண்டுகளில், உரிமம்-அனுமதி ராஜ்ஜியத்தை பற்றியும், மோசமான விளைவுகள் குறித்தும் கிட்டத்தட்ட அனைவரும் குரல் எழுப்பினர். ஒரு பொதுத் துறையிலிருந்து அரசாங்கம் வழங்கும் ஏகபோக உதவிகளை ஒரு போட்டி தனியார் துறைக்கு மாற்றுவது சமுத்திர சுழற்சியாகும், அங்கு ஒரு சிலர் மட்டுமே உயிர் வாழ்வார்கள். அதுவே இயற்கை மற்றும் வணிக விதியுமாகும்.

  பெரு நிறுவனங்கள் நினைக்குமளவுக்கு தீயவையல்ல, நிச்சயத் தேவையானவை.

  (ஆசிரியர் சஞ்சீவா சிவேஷ் தொழில்முனைவோர் பள்ளியின் நிறுவனர். கருத்துக்கள் தனிப்பட்டவை. ஆசிரியர் கருத்துக்களுக்கு தளம் பொறுப்பேற்காது)
  Published by:Gunavathy
  First published:

  Tags: Adani, Delhi farmers, Jio, Reliance

  அடுத்த செய்தி