எங்களுக்கு ரிஹானாவையும் தெரியாது, கிரெட்டா தன்பெர்கையும் தெரியாது, விவசாயிகளுக்கு ஆதரவளித்தால் என்ன கெட்டு விடும்?- ராகேஷ் திகைத் வேதனை

ராகேஷ் சிங் திகைத்.

வெளிநாட்டினர் எங்கள் போராட்டத்துக்கு எதையும் வாரிக் கொடுக்கவில்லை, எங்களிடம் இருந்து எதையும் எடுத்துச் செல்லப்போவதில்லை.

 • Share this:
  விவசாயப் போராட்டத்துக்கு பாப் பாடகி ரிஹானா மற்றும் ஸ்வீடன் நாட்டு இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்ட தன்பெர்க் ஆகியோர் ஆதரவளித்ததைத் தொடர்ந்து கடும் சிக்கல்கள் எழுந்து ட்விட்டர் மற்றும் ஊடகங்களில் கடும் வாக்குவாதங்கள் எழுந்தன.

  இந்நிலையில் தங்களுக்கு ரிஹானா யாரென்றும் தெரியாது, கிரெட்டாவையும் தெரியாது, வெளிநாட்டினர் ஆதரவளித்ததனால் என்ன கெட்டு விடப்போகிறது? என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் கேள்வி எழுப்பியுள்ளார்.

  குடியரசு தினத்தன்று டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைச் சம்பவத்துக்குப்பின் விவசாயிகள் போராட்டம் பிசுபிசுக்கத் தொடங்கியது. ஆனால், பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் கண்ணீருடன் மக்களிடம் பேசியது, விடுத்த வேண்டுகோளுக்குப்பின், விவசாயிகள் போராட்டத்தில் முன்பு இருந்ததைவிட கூடுதலாக மக்கள் ஆதரவு பெருகியுள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்தன.

  டெல்லி-உபி எல்லையான காஜிபூரில் போராடி வரும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.

  “எங்கள் போராட்டத்துக்கு எந்த வெளிநாட்டு மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். எனக்குத் தெரியவில்லை. வெளிநாட்டினர் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதில் என்ன பிரச்சினை இருக்கிறது?. வெளிநாட்டினர் எங்கள் போராட்டத்துக்கு எதையும் வாரிக் கொடுக்கவில்லை, எங்களிடம் இருந்து எதையும் எடுத்துச் செல்லப்போவதில்லை.

  நீங்கள் குறிப்பிடும் இவர்கள் யாரென்று எங்களுக்குத் தெரியாது. அவர்கள் ஆதரவு அளித்தால் நல்லதுதான். அதனால் என்ன கெட்டுவிடப்போகிறது?” என்று கூறினார்.

  கிரெட்டா தன்பெர்க், ரிஹானா ஆகியோர் விவசாயப் போராட்டங்களை ஆதரித்து பேசிஉள்ளது, இந்திய ட்விட்டர் உலகத்தையே உலுக்கியது,. வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஆதரவுகள் குறித்து எச்சரிக்கை விடுத்தன. ட்விட்டர் தளத்துக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

  கங்கனா ரணாவத் ரிஹானாவை கடுமையாகத் தாக்கிப் பேசினார். கிரிக்கெட் வீரர்கள் இந்தியா டுகெதர் என்று மெஸேஜ் போட்டு, விவசாயிகள் பிரச்சினை உள்நாட்டுப் பிரச்சினை என்று கூறினர், ஆனால் இதை வரவேற்றும், கிரிக்கெட் வீரர்களை கடுமையாக வறுத்தெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

  குறிப்பாக பெருநிறுவனங்களின் விளம்பர வருவாயில் வாழும் கிரிக்கெட் வீரர்களுக்கு விவசாயிகளைப் பற்றி என்ன தெரியும் என்று பலரும் சாடியிருந்தனர். சச்சின் டெண்டுல்கர் பொதுவாக தன்னைத் தவிர யாருக்காகவும் நின்றதில்லை , யாரோ எழுதிக் கொடுத்ததை அவர் பேசியுள்ளார் என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி.ராமனும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: