• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • அரசு அலுவலகங்களில் அது நடக்கும்... மத்திய அரசுக்கு விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை..

அரசு அலுவலகங்களில் அது நடக்கும்... மத்திய அரசுக்கு விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை..

Rakesh tikait

Rakesh tikait

விவசாயிகள் போட்டிருந்த டெண்ட்களை போலீசார் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகின..

  • Share this:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசுக்கு புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மாநில எல்லையில் ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கேயே தங்குமிடங்கள் அமைத்து சமைத்து சாப்பிட்டு வரும் விவசாயிகளின் போராட்டம் ஓராண்டை நெருங்கி வருகிறது. இதனிடையே டெல்லிக்கு செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளை மறித்து விவசாயிகள் போராடி வந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட உரிமை இருக்கிற போதிலும் சாலைகளை மறிக்க அவர்களுக்கு உரிமையில்லை என கடந்த வாரம் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பலனாக டெல்லி - ரோஹ்தக் மற்றும் டெல்லி - மீரட் எக்ஸ்பிரஸ்வே போன்ற நெடுஞ்சாலைகளில் பகுதியளவாக சாலைகளில் இருந்த தடுப்புக்கள் அகற்றப்பட்டு 11 மாதங்களுக்கு பின் போக்குவரத்து தொடங்கியிருக்கிறது. இதனால் டெல்லியிலிருந்து ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்கள் செல்வோர் நிம்மதியடைந்துள்ளனர்.

Also read: எங்களை அங்கீகரிக்காவிட்டால்… உலக நாடுகளுக்கு தாலிபான்கள் விடுத்த எச்சரிக்கை!

இதனிடையே, விவசாயிகள் போட்டிருந்த டெண்ட்களை போலீசார் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகின.. இதனையடுத்து விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய தலைவராக பார்க்கப்படும் பாரதிய கிசான் யூனியன் தலைவரான ராகேஷ் திகைத் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலில், “போராட்டக் களத்திலிருந்து விவசாயிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சித்தால், நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் வேளாண் சந்தைகளாக மாற்றப்படும்” என கூறியிருக்கிறார்.

மேலும், போலீஸ் நிலையங்கல், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் விவசாயிகள் சந்தைகளை அமைக்கும் சூழல் ஏற்படும் என ராகேஷ் திகைத் எச்சரித்திருக்கிறார்.

வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் அளிக்காமல் போராட்டம் தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: