புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதைத் தவிர மற்ற பிரச்சினைகள் குறித்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல சுற்றுக்கள் பேச்சு வார்த்தை நடந்தும் பயனில்லை, வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதைத் தவிர வேறு எதையும் ஏற்க மாட்டோம் என்று விவசாய சங்கங்களும் வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை, வேறு பேசுவோம் என்று மத்திய அரசும் பிடிவாதப் போக்கைக் கடைப்பிடிக்கின்றன.
புதிய வேளாண் சட்டங்களில் விவசாயிகள் கூறும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும், விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையில் எந்த மாற்ற மும் இருக்காது, விவசாய மண்டிகள் அகற்றப்பட மாட்டாது என்பன உள்ளிட்ட உறுதிமொழிகளை இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது அரசு முன்மொழிந்தது.
ஆனால், புதிய வேளாண் சட்டங் களை அடியோடு நீக்க வேண்டும் என்ற ஒரே நிலைப்பாட்டில் விவ சாயிகள் உறுதியாக இருந்ததால், இந்தப் பேச்சுவார்த்தைகளில் சுமுக முடிவு ஏதும் எட்டப்படவில்லை.
விவசாயிகள் தங்கள் வீடுகள், பகுதிகளில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அண்மையில் விவசாயிகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்தநிலையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு தொடர்ந்து பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. விவசாய அமைப்புகள் பேச விரும்பினால் அவர்களுடன் பேச மத்திய அரசு தயாராக உள்ளது. புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை பாதிக்காது. அதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளின் கோரிக்கைகள் கேட்கப்பட்டு அதில் மாற்றங்களும் செய்யப்பட்டு விட்டன.
இப்போது கூட விவசாயிகளுடன் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு தயாராக உள்ளது. அதேசமயம் புதிய வேளாண் சட்டங்களை திரும்பபெறும் கோரிக்கையை ஏற்க முடியாது. அதுதவிர வேறு பிற சாத்தியகூறுகள் குறித்து விவாதிக்கலாம். மற்ற பிரச்னைகள் குறித்து விவசாயிகள் பேச்சுவார்த்தை நடத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Farm laws, Farmers Protest