விவசாயிகள் போராட்டம் மூலம் புதிதாக உதயமாகியிருக்கும் சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா (SSM) கட்சி பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திணறிவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அரசு கொண்டு வந்திருந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி மாநில எல்லையில் கூடாரம் அமைத்து தங்கி கிட்டத்தட்ட ஒரு வருடமாக போராடி வந்தனர். விவசாயிகள் விடாப்பிடியாக இருந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மத்திய அரசு அறிவித்தது.
விவசாயிகள் போராட்டம் உலக அளவில் பிரபலம் அடைந்திருந்தது. விவசாயிகளுக்கு மக்களிடையே நன்மதிப்பும் இருந்தது. எனவே விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்த 22 விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா (SSM) என்ற புதிய கட்சியை தோற்றுவித்தனர். இதன் மூலம் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அவர்கள் திட்டமிட்டனர். பஞ்சாபின் 117 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்களை அறிவித்து தற்போது தேர்தல் களத்துக்கும் வந்திருக்கின்றனர். இருப்பினும் பாரம்பரிய கட்சிகள் போல தங்களால் செயல்பட முடியாமல் இருப்பதை தற்போது விவசாய கட்சி உணரத்தொடங்கியிருக்கிறது.
Also read:
நோய்வாய்ப்பட்ட தாயாருக்கு மருந்து வாங்குவதாக சிறுமியை அழைத்துச் சென்று பலாத்காரம்!!
விவசாயிகள் கட்சிக்கு கிராமப்பகுதிகளில் செல்வாக்கு இருக்கிறது. இருப்பினும் நகரப்பகுதிகளில் அக்கட்சிக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை என்றே சொல்ல வேண்டும். அதே போல பெரிய கட்சிகளை போல இக்கட்சியால் தேர்தல் பணியில் ஈடுபட முடியவில்லை.
22 விவசாய சங்கங்களுள் ஒன்றான அனைத்திந்திய கிசான் சபாவின் மாநில துணைத் தலைவர் லக்பிர் சிங் நிஜம்புரா கூறுகையில், “எங்களுடைய பின்புலம் கிராமப்பகுதிகளைச் சேர்ந்தது. நகரப்பகுதி வாக்காளர்கள் அவர்களின் பிரச்னைகளை நாங்கள் உணர்ந்திருக்க மாட்டோம் என கருதுகின்றனர். நகரப் பகுதி தொகுதிகளில் போட்டியிடுவதற்கு முன் எங்கள் தலைவர்கள் இது குறித்து சிந்தித்து பார்த்திருக்க வேண்டும்.
Also read: விளையாடச் சென்ற 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மைனர் சிறுவர்கள்!!
எங்கள் கட்சியின் சார்பாக நகரப் பகுதிகளில் போட்டியிட தொழிலதிபர்கள், பெரிய விவசாயிகள், வணிகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருப்பினும் அமைப்பு ரீதியாக பலம்வாய்ந்த பெரிய கட்சிகளைப் போல பிரச்சாரம் மேற்கொள்ளும் திறன் தங்களிடம் இல்லை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
தற்போது இது ஒரு விவசாயிகளின் இயக்கம் கிடையாது. இது ஒரு சமூக இயக்கம். எங்களின் கொள்கையும், தொலைநோக்கு பார்வையும் புரிந்து கொண்ட மக்களும் இருக்கிறார்கள். அதே போல நகரப் பகுதியினருக்கென பிரச்னைகள் இருக்கின்றன. பஞ்சாப் இளைஞர்கள் வேலைக்காக வெளிநாடு செல்வதை தடுக்க வேலைவாய்ப்புக்களை பெருக்க வேண்டும். போதைப் பொருளை ஒழிக்க வேண்டும். இதுவரை பஞ்சாபியர்கள் பார்த்திராத சுத்தமான அரசை உருவாக்க வேண்டும் என்று மற்றொரு விவசாய சங்கமான ஜாம்ஹுரி கிசான் சபாவின் மாநிலத் தலைவர் சத்னம் சிங் அஜ்னாலா தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.