முகப்பு /செய்தி /இந்தியா / பிரபல டிவி சீரியல் நடிகை ஷூட்டிங் செட்டில் தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு

பிரபல டிவி சீரியல் நடிகை ஷூட்டிங் செட்டில் தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு

நடிகை துனிஷா சர்மா

நடிகை துனிஷா சர்மா

ஷீஜான் மொகமதுவின் தூண்டுதலின் பேரில் தான் துனிஷா தற்கொலை செய்துகொண்டதாகவும் நடிகையைின் தாய் புகார் அளித்துள்ளார்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

படப்பிடிப்பு தளத்திலேயே பிரபல நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் நடிகை துனிஷா சர்மா. இவர் பல பாலிவுட் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்.

நடிகை காத்ரினா கைப்பின் படங்களில் அவரது குழந்தை பருவ வேடங்களில் நடத்ததின் மூலம் புகழ்பெற்ற துனிஷா பின்னர் பல டிவி சீரியல்களிலும் நடித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இந்நிலையில், 20 வயதான துனிஷா தனது டிவி சீரியல் படப்பிடிப்பு தளத்தில் உள்ள மேக் அப் அறையில் நேற்று மாலை தற்கொலை செய்து உயிரிழந்தார்.

அவரது உடலை கைப்பற்றிய மும்பை போலீசார் அதை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இவரின் தற்கொலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக துனிஷாவின் சக நடிகர் ஷீஜான் மொகமத் கான் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது.

இருவருக்கும் இடையே காதல் விவகாரம் இருந்ததாகவும், ஷீஜான் மொகமதுவின் தூண்டுதலின் பேரில் தான் துனிஷா தற்கொலை செய்துகொண்டதாகவும் நடிகையைின் தாய் புகார் அளித்துள்ளார். அதைத் தொடர்ந்து திரட்டப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சகீன் மொகமதுவை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும். மாநில உதவிமையம்: 104 ; சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

First published:

Tags: Commit suicide, Mumbai, Suicide, TV actress, TV Serial Actor died