Home /News /national /

எஸ்.பி அலுவலகம் எதிரே பிரபல ரவுடி வெட்டி கொலை... புதுச்சேரியில் பரபரப்பு

எஸ்.பி அலுவலகம் எதிரே பிரபல ரவுடி வெட்டி கொலை... புதுச்சேரியில் பரபரப்பு

 பிரபல ரவுடி வெட்டி கொலை

பிரபல ரவுடி வெட்டி கொலை

Puducherry : புதுச்சேரியில் பிரபல ரவுடியை, 5 மாதங்களாய் திட்டம் போட்டு மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏ ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே பிரபல ரவுடியை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

புதுச்சேரி கருவடிக்குப்பத்தை சேர்ந்தவர் பிரபல ரவுடி சரத் (எ)  பொடிமாஸ் (23). இவர் கடந்த மூன்று தினங்களாக அரியாங்குப்பம் காவல் நிலையம் பின்புறம் உள்ள தெற்கு காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே உள்ள தனது தங்கையின் வீட்டில் தங்கி இருந்த நிலையில் இவரை நோட்டமிட்டு வந்த மர்ம நபர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு தங்கி இருந்த வீட்டின் கதவை தட்டி உள்ளனர்.

வீட்டில் இருந்த அவரின் மாமா கதவை திறந்தவுடன் அவரை கத்தி முனையில் மிரட்டி அமரவைத்து, சரத்தின் கழுத்து, தலை, முகம் ஆகிய பகுதிகளில் தாக்கி தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஒடி விட்டனர். இது குறித்து   அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கொலை செய்யப்பட்ட சரத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து  கொலைக்கான காரணம் குறித்தும், யார் கொலை செய்தது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட சரத் மீது வெடி குண்டு வீச்சு, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. குண்டாஸ் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வெளியே வந்துள்ளார். அவரது எதிரிகள் சிறையில் இருந்து வந்தவுடன் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடந்த ஜனவரி மாதம் அவரை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டிருந்த நிலையில் இந்த தகவலை அறிந்த சிறப்பு படை போலீசார் சரத்தை எச்சரித்தனர். இதனால் சரத் வெளியூருக்கு  உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று அவர் அரியாங்குப்பத்தில் தனது தங்கை வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அறிந்த மர்ம கும்பல் அதிகாலை வந்து தலையை துண்டித்து வெட்டியுள்ளனர்.

Must Read : ஒற்றை காலில் நொண்டி அடித்தே பள்ளிக்கு செல்லும் 10வயது சிறுமி.. ஆசிரியை ஆவதே கனவு - உதவிக்கரம் நீட்டிய நெட்டிசன்கள்

லாஸ்பேட்டையை சேர்ந்த ரவுடி கும்பல் தான் கொலையை செய்திருப்பதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Suresh V
First published:

Tags: Murder, Puducherry, Rowdies

அடுத்த செய்தி