முகப்பு /செய்தி /இந்தியா / கோமாவில் இருப்பதாக கூறி இறந்தவரின் உடலை 18 மாதங்களாக வைத்திருந்த குடும்பம் - அதிர்ச்சி சம்பவம்

கோமாவில் இருப்பதாக கூறி இறந்தவரின் உடலை 18 மாதங்களாக வைத்திருந்த குடும்பம் - அதிர்ச்சி சம்பவம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இறந்தவரின் உடலை வீட்டில் வைத்து 18 மாதங்களாக ‘கங்கா நீர்’ தெளித்த குடும்பத்தின் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kanpur Nagar, India

கான்பூரில் உடல்நலக் குறைவால் இறந்தவரை கோமாவில் இருப்பதாக எண்ணி அவரது குடும்பத்தினர் 18 மாதங்கள் உடலை வீட்டில் வைத்து வந்துள்ளனர். இந்த செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் நகரில் வருமான வரித்துறையில் பணியாற்றிய நபர் கடந்த வருடம் உடல்நலக் குறைவால் இறந்துள்ளார். இதனை ஏற்காத குடும்பத்தினர் அவர் கோமாவில் தான் இருக்கிறார் என்று எண்ணி அவரின் உடலை 18 மாதங்களாக வீட்டில் வைத்து வந்துள்ளனர். மேலும் அவரின் மனைவி தினமும் காலை கங்கா நீரை அவரின் உடல் மேல் தெளித்து வந்துள்ளார். கங்கா நீர் தெளித்தால் அவர் விரைவில் கோமாவில் இருந்து குணமடைந்து விடுவார் என்று அவரின் மனைவி எண்ணிச் செய்துள்ளார். அவரின் மனைவிக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவரின் ஓய்வூதியம் குறித்த எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் கான்பூர் வருமானவரித் துறையிலிருந்து விசாரணை நடத்தக் கேட்டுக்கொள்ளப்பட்டது. அந்த வகையில் கான்பூர் காவல் துறையினர் மற்றும் சுகாதார அதிகாரிகள் அந்த குடும்பம் வசிக்கும் ராவத்பூரில் உள்ள வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியதில் இந்த உண்மை வெளிவந்துள்ளது.

Also Read : பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த இளம்பெண்: ஆத்திரத்தில் கொலை செய்த பாஜக பிரமுகர் மகன் கைது!

விசாரணையில் இறந்தவரின் பெயர் விம்லேஷ் தீட்சித் என்று தெரிய வந்துள்ளது. மேலும் அவர் திடீரென்று ஏற்பட்ட இதய சுவாச நோய்க்குறியால் இறந்துவிட்டதாகக் கடந்த ஆண்டு ஏப்ரல் 22ம் நாள் தனியார் மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்க மறுத்த குடும்பம் அவர் கோமாவில் உள்ளார் என்று கூறி அவரின் உடலைத் தினமும் கங்கா நீர் தெளித்து 18 மாதங்கள் வீட்டில் வைத்து வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து முதலில் அவரின் குடும்பம் உடலை எடுக்க ஒத்துழைக்காத நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவரின் உடலை மீட்டு லாலா லஜபதி ராய் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவரின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு அவர் இறந்ததை உறுதிசெய்தனர்.

இது குறித்து காவல்துறை தெரிவிக்கையில், அவர்கள் உடலை மீட்கும் போது உடல் அழுகிய நிலையிலிருந்ததாகக் கூறினர். மேலும் அந்த குடும்பத்தினர் அவர் கோமாவில் உள்ளதாகப் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் தெரிவித்துள்ளனர். பக்கத்து வீட்டுக்காரர்கள் அந்த குடும்பம் அடி அடி ஆக்சிஜன் சிலண்டரை எடுத்துச் சென்றதைப் பார்த்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை செய்ய மூன்று நபர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாகத் தலைமை மருத்துவ அதிகாரி மருத்துவர் அலோக் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Dead body, Uttar pradesh