அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உடலில் பெட்ரோல் உற்றி கொண்டவர்கள் தவறுதலாக தீ பற்றி உயிரை இழந்துள்ளனர். தம்பதியரின் சோக முடிவிற்குகாரணம் என்ன?
கன்னியாகுமரியொட்டிய கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரை அடுத்த நெல்லிமூடு பகுதியை சேர்ந்தவர்கள் 45 வயதான ராஜன், 36 வயதான அம்புலி தம்பதி. கூலி வேலை செய்து வந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். வீட்டு நிலம் தொடர்பாக பக்கத்து வீட்டு காரர் வசந்தா என்பவருக்கும் ராஜனுக்கும் நீண்ட நாள் பிரச்சனை இருந்துள்ளது.
நிலப்பிரச்சனை நீதிமன்றம் வரை செல்ல நீதிமன்றத்தில் ராஜனுக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளது. இதை தொடர்ந்து நிலத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் போலீசாருக்கும் வருவாய்துறையினருக்கும் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜனின் வீட்டை ஜப்தி செய்ய அதிகார்கள் வந்துள்ளனர்.
ஆனால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜன் தனக்கு மேற்முறையீடு உள்ளது. மேலும் உடனே வீட்டை காலி செய்ய முடியாது கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள் உடனே வீட்டை காலிசெய்ய சொல்லியுள்ளனர்.
மனமுடைந்த ராஜன் வீட்டில் இருந்த பெட்ரோலை தன்மீதும் மனைவி மீதும் உற்றிக்கொண்டு தீ வைத்து கொள்வதாக அதிகாரிகளை மிரட்டியுள்ளார். தீவைக்க முயன்ற ராஜனை தடுக்க காவலர் ஒருவர் முயன்ற போது தீ தவறி தம்பதியர் மீது பற்றியது. இதில் படுகாயமடைந்த ராஜனும் , அப்புலியும் 70 சதவீதம் தீ காயங்களுடன் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் படிக்க...
வங்கிகளில் நடக்கும் புதிய வகை மோசடி.. எச்சரிக்கும் போலீஸ்.. (வீடியோ)
தீவிர சிகிச்சை தொடர்ந்து வந்தநிலையில் திங்கள் அன்று காலை ராஜன் உயிரிழந்தார். அம்புலியும் அன்று இரவே உயிரிழந்தார். ராஜன் கொடுத்த மரண வாக்குமூலத்தில் அதிகாரிகளை மிரட்டவே இது போன்று செய்ததாகவும் ஆனால் தவறாக தீ பற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். காவலர்கள் தீயை தட்டிவிட்டதால் தான் தனது தாய், தந்தை இறந்த்தாக ராஜனின் மகன்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் எந்த நிலத்திற்காக ராஜன் போராடி உயிர்விட்டாரோ அதே இடத்தில் தம்பதியரின் உடல்களை ஊர்மக்கள் அடக்கம் செய்துள்ளனர். ஜப்தி செய்ய வந்த அதிகாரிகளை தடுக்க நினைத்து தீபற்றி தம்பதியர் உயிர்விட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்