ஹோம் /நியூஸ் /இந்தியா /

பெண் குழந்தை பிறந்த உற்சாகம்.. ஹெலிகாப்டரில் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர் - வீடியோ!!

பெண் குழந்தை பிறந்த உற்சாகம்.. ஹெலிகாப்டரில் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்த பெற்றோர் - வீடியோ!!

ஹெலிகாப்டரில் தாய், தந்தையுடன் வந்து இறங்கிய குழந்தை ராஜலட்சுமியைக் காண கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக, மகாராஷ்டிராவில் தம்பதியர் தங்களது குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்துச் சென்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் ஷெல்காவோன் (Shelgaon) பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் விஷால் ஜரேகரின் மனைவிக்கு கடந்த ஜனவரி 22-ம் தேதி அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு விஷால் ஜரேகரின் மனைவி, Bhosari பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

  இந்நிலையில், தங்களது குடும்பத்தில் பல தலைமுறைகளாகப் பெண் குழந்தையே இல்லை என்றும், முதன்முறையாக பெண் குழந்தை பிறந்ததைக் கொண்டாடும் விதமாக ஒரு லட்சம் ரூபாய்க்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து குழந்தையை போசாரியில் இருந்து ஷெல்ஹாவோனில் உள்ள தனது வீட்டிற்கு விஷால் ஜரேகர் அழைத்து வந்தார்.

  இதுதொடர்பாக குழந்தையின் தந்தை விஷால் ஜரேகர் கூறும்போது, எங்கள் மொத்த குடும்பத்திலும் ஒரு பெண் குழந்தை கூட கிடையாது. அதனால், எங்கள் மகளை வீட்டிற்கு சிறப்பாக வரவேற்று வர வேண்டும் என நினைத்தோம். அதற்காக, ரூ.1 லட்சத்திற்கு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்து அதில் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தோம் என்று அவர் கூறினார்.

  ஹெலிகாப்டரில் தாய், தந்தையுடன் வந்து இறங்கிய குழந்தை ராஜலட்சுமியைக் காண கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டனர்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Helicopter, Maharashtra