Home /News /national /

மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி மதபோதகரின் குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல்

மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி மதபோதகரின் குடும்பத்தினர் மீது கொலைவெறித் தாக்குதல்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்

அடுப்பங்கறையில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் சட்டியை எடுத்து வந்து அவரின் மனைவி பாரதி மீது ஊற்றியதுடன், சட்டியை கொண்டு காலில் அடித்துள்ளனர்.

    கிறிஸ்துவ மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி மதபோதகரின் குடும்ப நபர்கள், பெண்கள் உள்ளிட்ட வர்கள் மீது வலதுசாரி ஆதரவாளர்கள் சிலர் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அவர்களை அவதூறாக பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் சமீப காலங்களில் மதமாற்றம் சார்ந்த விவகாரங்கள் தலைதூக்கி உள்ளன. மாநில அரசு கட்டாய மதமாற்ற தடை சட்ட மசோதாவை விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்து சட்டமாக்க இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் கடந்த வாரம் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறி பெண்கள் உள்ளிட்ட மதபோதகரின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.

    கர்நாடாகாவின் பெலாகவி மாவட்டம் துக்கனட்டி எனும் கிராமத்தில் கடந்த டிசம்பர் 29ம் தேதி மதியம் 1 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது, அக்கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான அக்‌ஷய்குமார் கரகன்வி என்பவர் மதபோதகராக இருந்து வருபவர் என கூறப்படுகிறது. சம்பவத்தன்று அவர் தனது வீட்டில் பிரார்த்தனை கூட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, வலதுசாரி ஆதரவாளர்கள் 7 பேர் அங்கு அத்துமீறி நுழைந்து பிரார்த்தனை கூட்டத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர்.

    Also read:  இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி - காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ வீரர் சுட்டுக் கொலை

    அக்‌ஷய்குமார் கரகன்வி குடும்பத்தினர் கிராமத்தினரை கிறிஸ்தவ மதமாற்றம் செய்வதாக கூறி அவரையும் அவரின் குடும்ப உறுப்பினர்களையும் வலதுசாரி ஆதரவாளர்கள் அடித்து தாக்குதலில் ஈடுபட்டனர்.

    மேலும் அக்‌ஷய்குமார் கரகன்வியின் குடும்பத்தினரை மிகவும் கேவலமாக திட்டியதுடன், அடுப்பங்கறையில் கொதித்துக் கொண்டிருந்த சாம்பார் சட்டியை எடுத்து வந்து அவரின் மனைவி பாரதி மீது ஊற்றியதுடன், சட்டியை கொண்டு அவருடைய காலிலும் அடித்துள்ளனர்.

    Also read:  டேமேஜ் ஸ்கூட்டர்களை டெலிவரி செய்த ஓலா நிறுவனம் - குவியும் புகார்கள்

    இதன் காரணமாக பாரதிக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. 3 பெண்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் 5 பேர் மீது இத்தாக்குதல் நடைபெற்றுள்ளனர். இதன் பின்னர் இச்சம்பவம் குறித்து காதாபிரபா காவல் நிலையத்தில் தாக்குதலில் ஈடுபட்ட 7 பேர் மீது புகார் அளிக்கப்பட்டது. 7 பேர் மீதும் கலவரத்தில் ஈடுபடுதல், அத்துமீறி நுழைதல், கிரிமினல் சதி, வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Christian conversion, Religious conversion

    அடுத்த செய்தி