• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • எப்ஐஆர் நகல் எங்கே? விவசாயிகளின் உடலை தகனம் செய்ய மறுத்த குடும்பத்தினர்!

எப்ஐஆர் நகல் எங்கே? விவசாயிகளின் உடலை தகனம் செய்ய மறுத்த குடும்பத்தினர்!

 எப்ஐஆர் நகல் எங்கே? விவசாயிகளின் உடலை தகனம் செய்ய மறுத்த குடும்பத்தினர்!

எப்ஐஆர் நகல் எங்கே? விவசாயிகளின் உடலை தகனம் செய்ய மறுத்த குடும்பத்தினர்!

எப்ஐஆர் நகல், பிரேத பரிசோதனை அறிக்கை கேட்டு விவசாயிகளின் உடலை தகனம் செய்ய குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

  • Share this:
    உத்தர பிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் மவுரியா மற்றும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஆகியோர் அரசு விழாவில் பங்கேற்கச் சென்று கொண்டிருந்தபோது, விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்களின் வருகையை கண்டித்து, கறுப்புக்கொடி ஏந்தி வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது துணை முதல்வர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. இதில் கார் மோதி நான்கு விவசாயிகள் பலியாகினர் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, நடந்த வன்முறையில் 2 பாஜக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்கு பேர் உயிரிழந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து விவசாய அமைப்பான சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பினர் கூறும்போது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு பாதுகாப்புக்கு வந்த வாகங்களின் வரிசையில் மிஸ்ராவின் மகன் ஒரு காரை ஓட்டி வந்ததாகவும், அவரே விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகவும், நடந்த சம்பவத்துக்கு அமைச்சரின் மகனே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதற்கிடையில் நடந்த சம்பவத்துக்கும் தனது மகனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறியுள்ளார்.
    இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், இந்த வன்முறை சம்பவத்தின் போது எனது மகன் அங்கு இல்லை. எனது மகன் துணை முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தார். நானும் அந்த நிகழ்ச்சியில் தான் இருந்தேன், அதற்கான வீடியோ ஆதாரம் உள்ளது. அங்கிருந்த சில சமூக விரோதிகளே போராட்டக்காரர்களே கத்தி, கம்பு கொண்டு தாக்கியுள்ளனர். என் மகன் மட்டும் அங்கிருந்திருந்தால் நிச்சயமாக உயிருடன் திரும்பியிருக்க மாட்டார் என்று கூறியிருந்தார்.

    தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உள்பட 8 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே, லக்கிம்பூர் பகுதியில் கார் மோதி உயிரிழந்த 4 விவசாயிகளில் ஒருவர் லவ்பிரீத் சிங் (19), இவர் உயிரிழக்கும் தருணத்தில் மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி, தனது தந்தையை விரைவாக வரும்படி கெஞ்சியுள்ளார். எனினும், அவரது குடும்பத்தினர் மருத்துவமனையை சென்றடைய தாமதமாகிவிட்டது. இதனால், அவரது கடைசி நேரத்தில் கூட குடும்பத்தினர் அவரை பார்க்க முடியாமல் போனது.

    இதைத்தொடர்ந்து, இன்று லவ்பிரீத் சிங்கின் உடல் அவரது வீட்டில் கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரின் நகல், பிரேத பரிசோதனை அறிக்கை உள்ளிட்டவற்றை தராத வரை லவ்பிரீத் சிங் உடலை தகனம் செய்ய முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளனர். லவ்பிரீத் சிங் உடலை சுற்றி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஏராளமானோர் சூழ்ந்துள்ளனர்.

    இதுதொடர்பாக லவ்பிரீத் சிங்கின் தந்தை சத்னம் சிங் கூறும்போது, எனது மகன் கார் ஏற்றி நசுக்கப்பட்டான். இதற்கு காரணமானவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த சம்பவத்தை முடிந்த அளவு மூடி மறைக்கவே அரசு முயற்சிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், அவர் கூறும்போது, எனது மகன் மருத்துவமனையில் இருந்து தொலைபேசியில் என்னிடம் பேசும்போது, நன்றாக இருப்பதாகவும், விரைவாக மருத்துவமனை வரும்படியும் கூறினார். எனினும், நாங்கள் மருத்துவமனையை அடைந்த போது அவன் உயிரிழிந்துவிட்டான் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.

    இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது அமைச்சருடன் வந்த கார்கள் மோதும் வீடியோவை காங்கிரஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் சாலையில் நிற்கும் விவசாயிகள் பின்புறம் வழியாக வேகமாக வரும் கார் அவர்கள் மீது மோதி செல்கிறது. தொடர்ச்சியாக இரண்டு கார்கள் அதேபோல செல்கின்றன. பார்ப்பவர்களைப் பதறச் செய்யும் வகையில் உள்ள இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: