ஹோம் /நியூஸ் /இந்தியா /

பென்ஷன் பணத்தில் கள்ள நோட்டு: அதிர்ந்து போன பயனாளிகள்!

பென்ஷன் பணத்தில் கள்ள நோட்டு: அதிர்ந்து போன பயனாளிகள்!

ரூபாய் நோட்டு

ரூபாய் நோட்டு

உதவித்தொகையில் கள்ள நோட்டுகள் இருப்பதை கண்ட பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஆந்திரப் பிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் வழங்கப்பட்ட மாதாந்திர உதவித் தொகையில் கள்ளநோட்டுகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திராவில் மூத்த குடிமக்கள், விதவைகள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு மாதம்தோறும் அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக புத்தாண்டையொட்டி நரசாபாளையத்தில், வழங்கப்பட்ட உதவித்தொகையில் கள்ள நோட்டுகள் இருப்பதை கண்ட பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து நலத்திட்டத் துறை துணை அதிகரியிடம் பயனாளிகள் முறையிட்டதை தொடர்ந்து, வழங்கிய பணம் முழுவதும் திரும்ப பெற்றுகொள்ளப்பட்டது. மேலும், வங்கியில் இருந்து கொண்டு வந்த பணத்தை அப்படியே வழங்கியதாகவும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

First published: