போலிச் செய்திகளால்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றனர் - மத்திய அரசு விளக்கம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு போலிச் செய்திகளே காரணம் என்று மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

போலிச் செய்திகளால்தான் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றனர் - மத்திய அரசு விளக்கம்
இடம்பெயரும் தொழிலாளர்கள்
  • News18 Tamil
  • Last Updated: September 16, 2020, 2:24 PM IST
  • Share this:
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, நாடு முழுவதும் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்களது ஊருகளுக்குச் சென்றனர். மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மாலா ராய், எழுத்துப்பூர்வமாக ஒரு கேள்வியை முன்வைத்தார்.

அதில், கொரோனா பெருந்தொற்றை சமாளிக்க மார்ச் 25ம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பாதுகாக்க மத்திய அரசு எடுத்த நடவடிககைகள் குறித்தும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஊர் செல்லும் வழியில் இறப்பதற்கான காரணங்கள் குறித்தும் அரசு விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டிருந்தார்.

இதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், ‘ஊரடங்கு காலத்தில் போலி செய்திகளால் ஏற்பட்ட பீதியல்தான் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது.


மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள், உணவு, குடிநீர், தங்குமிடம் குறித்து கவலைப்பட்டனர். புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசு அனைத்து நடவடிக்கையையும் எடுத்தது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
First published: September 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading