போலி அமேசான் கால்சென்டர்: டெல்லியிலிருந்து அமெரிக்கர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி- 5 பெண் உள்பட 26 பேர் கைது

கைது செய்யப்பட்ட 26 பேர்

அமேசான் நிறுவன கால்சென்டர் ஊழியர்கள் போல பேசி டெல்லியிலிருந்து அமெரிக்கர்களை ஏமாற்றிய 26 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 • Share this:
  ஆண்ட்ராய்டு இணைய உலகில் நாம் தற்போது வாழ்ந்து வருகிறோம். நமக்கு தேவையான அத்தனை வசதிகளும் ஒரு போனில் கிடைத்துவிடுகிறது. உலகில் எந்த மூளையில் இருப்பவர்களையும் உள்ளங்கை செல்போனில் நாம் தொடர்பு கொள்ள முடிகிறது. அத்தனை வசதிகளையும் பெறுவதற்கு ஒரு ஆண்ட்ராய்டு போனும், ஒரு ஆப்பும் போதுமானதாக இருக்கிறது. உலகம் எந்த அளவு உள்ளங்கையில் சுருங்கி அடங்கியுள்ளதோ, அதேபோல, ஆன்லைன் திருட்டுகளும் ஏராளம் நடைபெறுகின்றன.

  நாம் எதிர்பாராத வகையில் நாளும் ஒரு புதிய திருட்டு நடைபெறுகிறது. டெல்லியில் ஒரு நவீன திருட்டு கும்பல் பிடிப்பட்டுள்ளது. டெல்லியின் புறநகர் பகுதியான சுல்தான்புர் பகுதியில் 26 பேர் இணைந்து போலி கால் சென்டர் ஒன்றை நடத்தியுள்ளனர். அதில், ஐந்து பேர் பெண்கள். அவர்கள், அமேசான் நிறுவன ஊழியர்கள் என்று தங்களைக் காட்டிக்கொண்டனர்.

  போலி கால்சென்டர்


  அவர்கள், இங்கிருந்து வாய்ப்(VOIP) போன்ற சட்டவிரோத தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அமெரிக்காவிலுள்ள அமேசான் ஆப் பயனாளர்களுக்கு போன் செய்து உங்கள் ஐ.டி ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று கூறி மிரட்டி பணம் சம்பாதித்துள்ளனர். சுமார், 7 மாதங்களாக இந்த போலி கால் சென்டரை நடத்திவந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 5 பேர் வரை ஏமாற்றுகின்றனர். இதுவரையில், 1,250 பேர் வரை ஏமாற்றியுள்ளனர். அதன் மூலம் 4 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  போலி கால் சென்டரில் தொலைபேசி மூலம் ஏமாற்றி பேசிக்கொண்டிருக்கும்போது காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். தெற்கு மாவட்ட காவல்துறையினர் 26 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும், 29 கணினி, இரண்டு இணைய ஸ்விட்சர்ஸ் மற்றும் மோடம் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்டுள்ளனர். காவல்துறை சோதனை மேற்கொள்ளும்போது கால் சென்டர் நடத்துவதற்கான ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அவர்களிடம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்தது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
  Published by:Karthick S
  First published: