Home /News /national /

FACT CHECK: தோல்வியால் கதறி அழுதாரா பங்கஜ் முண்டே? உண்மை நிலவரம் என்ன?

FACT CHECK: தோல்வியால் கதறி அழுதாரா பங்கஜ் முண்டே? உண்மை நிலவரம் என்ன?

  • News18
  • Last Updated :
    மஹாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அரசில் அமைச்சராக இருந்த பங்கஜ் முண்டே, திடீர் தோல்வியை தாங்க முடியாமல் கதறி அழுததாக செய்திகள் பரவின. ஆனால்,  அவர் அழவில்லை என்பதுதான் உண்மை.

    மகாராஷ்ட்ரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சிவசேனா கூட்டணி 158 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

    பாஜக மூத்த தலைவரும், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சருமான கோபிநாத் முண்டேவின் மகள் பங்கஜ் முண்டே, பார்லி தொகுதியில், தேசியவாத காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட தனது நெருங்கிய உறவினரான தனஞ்ஜெய் முண்டேவிடம் தோல்வியடைந்தார்.

    இந்நிலையில், எதிர்பாராத தோல்வியால் பங்கஜ் முண்டே கதறி அழுதார் என்ற செய்திகள் புகைப்படத்துடன் பரவின. ஆனால், அவர் அவ்வாறு அழவில்லை. அவர்தொடர்பாக பரவும் படமும் பழைய படம் என்பதை நியூஸ்18 தெளிபடுத்தியுள்ளது.

    அதாவது, தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பாக, டிவி9 மராத்திக்கு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பங்கஜ முண்டே, தன்னைப் பற்றிய கருத்து ஒன்றுக்கு மன வேதனையுடன் பதில் அளித்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் பரவ தொடங்கின.

    அந்த படமும், செய்தியும் உண்மையல்ல என்பதை தெளிவுப்படுத்துகிறோம்.

    Published by:Sankar
    First published:

    Tags: BJP, Fact Check

    அடுத்த செய்தி