• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • Fact Check : கொரோனா தடுப்பூசியால் ‘அயர்ன் மேன்’ ஆகிவிட்டேன்.. தட்டு.. ஸ்பூன் உடலில் ஒட்டுகிறது.. - அதிர்ச்சி கிளப்பும் நாசிக் முதியவர்

Fact Check : கொரோனா தடுப்பூசியால் ‘அயர்ன் மேன்’ ஆகிவிட்டேன்.. தட்டு.. ஸ்பூன் உடலில் ஒட்டுகிறது.. - அதிர்ச்சி கிளப்பும் நாசிக் முதியவர்

நாசிக்கை சேர்ந்த் முதியவர்

நாசிக்கை சேர்ந்த் முதியவர்

அரவிந்த் சோனாரின் மகன் விளையாட்டாக உங்கள் உடலில் காந்த சக்தி ஏற்பட்டுள்ளதாக என சோதிப்போம் எனக் கூறி நாணயங்கள் மட்டும் பிளேட்களை வைத்துள்ளார்.

  • Share this:
    கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட பின் காய்ச்சல் மற்றும் உடல்வலி இருப்பதாக சிலர் கூறுகின்றனர். நாசிக்கை சேர்ந்த 70 வயது முதியவர் கொரோனா தடுப்பூசி போட்டபின் என் உடம்பில் காந்தசக்தி வந்துவிட்டது எனக் கூறி ஷாக் கொடுக்கிறார். இதுதொடர்பாக வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த 70 வயது முதியவர் அரவிந்த் சோனார். கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் மார்ச் மாதம் முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. சீனியர் சிட்டிசன் என்ற அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக்கொண்டார். இதற்கு அடுத்து இரண்டாவது டோஸ் ஜூன் மாதம் 2-ம் தேதி எடுத்துக்கொண்டுள்ளார்.

    அரவிந்த் சோனாரின் மகன் ஜெயந்த் இணையத்தில் தான் பார்த்த வீடியோ குறித்து குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். டெல்லியில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபரின் உடலில் காந்தசக்தி உற்பத்தியானதாக அந்த வீடியோவில் பார்த்ததாக கூறியுள்ளார். வீட்டில் பெரியவர்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டதால் விளையாட்டாக உங்கள் உடலில் காந்த சக்தி ஏற்பட்டுள்ளதாக என சோதிப்போம் எனக் கூறி நாணயங்கள் மட்டும் பிளேட்களை வைத்துள்ளனர். அரவிந்த சோனாரில் உடலில் அவை ஒட்டிக்கொண்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முதலில் உடலில் இருந்த வியர்வை காரணமாக நாணயங்கள் ஒட்டியிருக்கும் என எண்ணியுள்ளனர். எனவே குளித்துவிட்டு வந்து மீண்டும் சோதனை செய்தபோது உடலில் நாணயங்கள், பிளேட், ஸ்பூன் எல்லாம் ஒட்டிக்கொண்டன. இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். கோவிட்-19 தடுப்பூசி இரண்டாவது டோஸ் எடுத்த பிறகு தான் உடலில் இந்த மெட்டல்கள் ஒட்ட ஆரம்பித்துள்ளது என்கிறார் அரவிந்த் சோனார்.

    Also Read: ஆபாசப் பேச்சு : மதன் யூடியூப் சேனல் மீது விசாரணையை தொடங்கிய குழந்தைகள் நல உரிமை ஆணையம்

     



     




    View this post on Instagram





     

    A post shared by Bol Bhidu (@bolbhidu)






    இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதையடுத்து மாநகராட்சி இருந்து வந்து விசாரணை செய்துள்ளனர். நாசிக் மாநகராட்சியை சேர்ந்த மருத்துவர் அரவிந்த் சோனார் வீட்டிற்கு சென்று ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து பேசிய மருத்துவர் அசோக், “ நான் அந்த வீடியோவை பார்த்தேன். தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இவ்வாறு நடந்தது என உறுதி செய்யமுடியாது. விசாரணைக்கு பின்னரே இந்த விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வரமுடியும். இந்த விவகாரத்தில் இப்போதைக்கு அரசாங்கத்துக்கு ஒரு அறிக்கை அனுப்புவோம். இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படும்” என்றார்.

     



    உண்மை என்ன?

    இதுதொடர்பாக பிஐபி ஃபேக்ட் செக் (PIB Fact check) ட்விட்டர் போஸ்டில். 'நிறைய பதிவுகள் மற்றும் வீடியோக்கள் கோவிட் 19 தடுப்பூசியால் மக்களுக்கு காந்த சக்தி ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. கோவிட் 19 தடுப்பூசியால் மக்களுக்கு காந்த சக்தி எல்லாம் ஏற்படாது. தடுப்பூசியானது முற்றிலும் பாதுகாப்பானது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: