ஹோம் /நியூஸ் /இந்தியா /

Fact Check - பாகிஸ்தான் வாழ்க என கோஷம் எழுப்பிய பெண்ணை சந்தித்தாரா ராகுல் காந்தி.. உண்மை இதோ

Fact Check - பாகிஸ்தான் வாழ்க என கோஷம் எழுப்பிய பெண்ணை சந்தித்தாரா ராகுல் காந்தி.. உண்மை இதோ

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி

பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி

கர்நாடகா மாநிலத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் அமுல்யா என்ற சமூக செயற்பாட்டாளர் பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பி சர்ச்சையை கிளப்பினர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Kerala, India

  பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பிய பெண்ணை தனது நடைப்பயணத்தின்போது ராகுல் காந்தி சந்தித்ததாக கூறி பதிவுகள் சமூக வலைத்தளத்தில் வைராலகி வருகின்றது.

  2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் சிஏஏ சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் AIMIM கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி பங்கேற்றனர். இந்த போராட்ட பொதுக்கூட்டத்தில் அமுல்யா லியோனா என்ற மாணவி பங்கேற்றார். கூட்டத்தில் மாணவி அமுல்யா பேசி முடித்து பின்னர் பாகிஸ்தான் ஜிந்தாபாத் (பாகிஸ்தான் வாழ்க) என்று கோஷம் எழுப்பி பரபரப்பை கிளப்பினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அமுல்யா மீது வழக்குப்பதிவு கைது செய்யப்பட்டார்.

  ராகுல் காந்தி தற்போது பாரத் ஜோடோ என்ற பெயரில் நாடு முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த யாத்திரையில் அவர் பாகிஸ்தான் வாழ்க என்ற கோஷம் எழுப்பிய மாணவி அமுல்யாவை சந்தித்தாக செய்திகள் பரவி வருகின்றன.

  உண்மை தகவல் என்ன

  150 நாள் நடைபெறும் இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் 17ஆம் யாத்திரையை கேரளாவில் மேற்கொண்டு வருகிறார். அப்போது கேரளா மாணவர் சங்கத்தின் எர்ணாகுளம் மாவட்ட பொது செயலாளர் மிவா ஜாலி என்ற மாணவியை ராகுல் காந்தி காந்தி சந்தித்துள்ளார். ராகுல் காந்தியுடனான சந்திப்பு வாழ்நாளில் மகிழ்ச்சியான தருணம் என்று அந்த மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார்.

  இதையும் படிங்க: மன்மோகன் சிங் சிறந்த நபர் தான், ஆனால்.. விவாதமாகும் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் கருத்து

  இந்த பெண் மிவா பார்ப்பதற்கு அமுல்யா போலவே தோற்றமளிக்கும் நிலையில், இரு புகைப்படத்தையும் வைத்து ராகுல் காந்தி பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட மாணவியை சந்தித்தாக போலி செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்த செய்தி உண்மை என கருதி பாஜக ஆதரவு தரப்பினர் ராகுலை விமர்சித்து வந்த நிலையில், தற்போது அது வேறு பெண் என்ற உண்மை வெளிவந்துள்ளது.

  காங்கிரஸ் தலைவர்களும் இது பொய் பிரச்சாரம் என்று கூறி உண்மையான தகவலுடன் கூட புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

  Published by:Kannan V
  First published:

  Tags: Fact Check, Rahul gandhi, Viral News