பிரம்மாண்ட பெருமாள் சிலைக்கு சிறப்பு பூஜைகள் என்று பரவும் படங்கள் போலியானவை

பிரம்மாண்ட பெருமாள் சிலைக்கு சிறப்பு பூஜைகள் என்று பரவும் படங்கள் போலியானவை
பிரம்மாண்ட பெருமாள் சிலை என பரவிய படம்
  • Share this:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் பகுதியில் இருந்து பெங்களூர் எடுத்து செல்லப்பட்ட பெருமாள் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதாக படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இந்த படம், சம்பந்தப்பட்ட பெருமாள் சிலை இல்லை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், சிலை செய்யும் பணிகள் முழுமையடையவில்லை என்றும், தற்போது அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலையின் பின்னணி

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில், ஸ்ரீகோதண்டராம சாமி கோவிலில் பிரம்மாண்ட பெருமாள் சிலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் கோவில் அறக்கட்டளை சார்பில், கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறை குன்றிலிருந்து பாறையை தோண்டி, வெட்டி எடுக்கும் பணி கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கியது.அந்த சிலை செய்ய 64 அடி உயரம் 26 அடி அகலம் கொண்ட பாறையை,  350 டன் எடையில் வெட்டி எடுக்கப்பட்டது.

இதில் முகம் மற்றும் இரண்டு கைகள் வடிவமைத்து, 2018 நவம்பர் 7–ந் தேதி 240 டயர்கள் கொண்ட லாரியில் புறப்பட்டு சென்றது. வழியில் ஏராளமான இடைஞ்சல்களுக்கு மத்தியில் பெங்களுரு சென்றடைந்தது.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading